கார்த்திகை தீபம்
இந்த ஆண்டு கார்த்திகை தீபம்- திருவண்ணாமலை, ஸர்வாலய தீபம் -
25th November 2015
இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்
கார்த்திகை மாதம் தன்னில்
கார்த்திகை திரு நட்சத்திர நாளில்
திருவண்ணாமலை தீபம் கண்டு
அழகாய் பலகை தன்னில் மாக்கோலமிட்டு
அடுக்கடுக்காய் அகல் விளக்கேற்றி
தாம்பூலம் உடன் நெற்பொறி அவல்பொரி
உருண்டை படைத்து உன்னை வணங்கி
அழகிய வரிசையாய் அகம் எங்கும் வைத்து
சிறு பெண்கள் அழகிய பட்டு பாவடையில்
அழகு சேர்த்து உள்ளம் உவகை பெற
கொண்டாடுவோம் கார்த்திகை தீப நாளையே!
Kartikai Deepam is the lighting of lamps on the Krittika or Kartika Nakshataram day in
Tamil Nadu and Kerala in Karthigai month. There are several reasons or stories behind observing Karthigai Deepam. Popular legend associated with that of Karthigai Deepam is that of Lord Shiva appearing in the form of Lingodhbhava – a pillar of fire with no end and beginning. This is celebrated at the famous
Year 2020: Karthigai Deepam is on 29th Novemebr 2020
நவம்பர் 29 (கார்த்திகை 14) அன்று விடியற்காலை 4.00 மணிக்கு பரணி தீபம் உற்சவம் நடைபெறும்.
மதியம் அருள்மிகு சுப்ரமண்யர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்
மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் காட்சி, அருள்மிகு அண்ணாமலை ஜோதி தீப தரிசனம் இரவு அவரோகணம் கொடியிறக்க) பின்பு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவம் நடக்க உள்ளது
கார்த்திகை தீப தத்வம் - தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷ
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா U விப்ரா
''புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்'' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா:) கொசுக்களையும் (மசகா: - மசகம் என்றால் கொசு. 'மஸ்கிடோ' இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ஸ்லோகம் ப்ரார்த்திக்கிறது.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது. 'த்ருஷ்ட்வா' என்று ஸ்லோகத்தில் வருவதற்கு 'பார்த்தால்'என்று அர்த்தம். வ்ருக்ஷம் - மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா? தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. 'பார்த்தால்'என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ''பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை;இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ?அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்''- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.