Popular Posts

Wednesday, October 31, 2012

Swamimalai Murugan part 1 ஒரு கால் நினைக்கின்


ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

 சரயுவின் கவிதைகள்      வே. ராமச்சந்திரன் 
 


குமரன் சிரிப்பின் அழகு குன்றத்தில் ஒளியாய் மிளிர 
வேல் ஏந்திய கையினன் அபய முத்திரை காட்டியென்
அடிபணிந்த மனதினில் அச்சத்தை தவிர்த்துட்டு
பாலும் பன்னீரும்  சந்தனமும் பஞ்ச அமிர்தமும் 

எங்கென வினவ அவை கொண்டு அபிஷேகமிட்டு
மல்லிகை பூ மாலையிட்டு தசாங்கமும் தாம்பூலமும் 
சமர்பித்து எனைக் காக்க மயிலேறி வந்தவனை
சிரம் தாழ்த்தி வணங்கி மனம் குளிர தரிசித்தேன்! 

 





மீசை நரைத்திடினும் ....


மீசை நரைத்திடினும் ....

சரயுவின் கவிதைகள்      வே. ராமச்சந்திரன் 

அலை நோக்கிச் செல்ல கால் போன போக்கில் 
சிறுவன் போல் கடற்கரையில் கால்கள் பதிக்க
நுரைத் தண்ணீர் கால் கழுவ கால் கீழ் மணல் 
அரிக்க மனம் லேசாகப் பறக்கையிலே அகில
உலகம் பெற்றது போல் மகிழ்திட்ட போழ்தினிலே 
என் ஆசை நரைக்கவில்லை!

தெருக்கோடி சிறுசுகள் பந்து வீசி மட்டைக் கொண்டு 
அடிக்கும் வேளையிலே லாவகமாய் பந்தெடுத்து சுழற் 
பந்தாய் வீசுகையில் கைத்தட்டும் சிறுசுகளின்
புன்னகையில் கரைந்திட்டு பந்து போன்ற உலகம் 
கைக்குள்ளே வந்திட்ட மனத்தினனாய் பூரித்திடும் 
என் ஆசை நரைக்கவில்லை!

மருந்தே உணவென்பார் வீட்டினிலே ஆயினும்
மாலை பூங்காவினில் நண்பர் குழாம் சேர்கையில்
மின்வெட்டு முதல் தேர்தல் வரை அலசி ஆராய்ந்தபின்
அவர்களின் சிலர் உந்துதலால் வேண்டுவன உட்கொண்டு
அதை விமரிசனமும் 
செய்திட்டு மகிழ்ந்திட்ட மனத்தினன்    
என் ஆசை நரைக்கவில்லை! 
  

Thursday, October 25, 2012

பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short


பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short

பிரம்மோபநிஷத்
சுருக்கம்                                  



இந்த உபநிஷத் 23 செய்யுள்கள் கொண்டது. அதன் பொருள் சுருக்கம் இவ்வாறு. உடலில் நான்கு இடங்களில் பரமாத்மாவை நான்கு வடிவில் தியானிக்க வேண்டும். தொப்பிள் குழியில் விழிப்பு நிலையில் பிரம்மாவாகவும், ஹிருதயத்தில் கனவு நிலையில் விஷ்ணுவாகவும், கழுத்தில் உறக்க நிலையில் ருத்ரனாகவும், தலை உச்சியில் துரீயசமாதியில் அக்ஷரபிரம்மமாகவும் தியானிக்க வேண்டும். அந்த பரமபுருஷன் மனதில்லாமல் நினைப்பவனாகவும், காதில்லாமல் கேட்பவனாகவும், கை கால்கள் இல்லாமல் செயல் புரிபவனாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வருபனாகவும் உள்ளவன். நான்காம் நிலை நிர்வாண நிலையான பரபிரம்மமாகும். அதில் உலகம் உலகமாயில்லை, தேவர்கள் தேவர்களாக இல்லை.மனிதர்கள் மனிதர்களாக இல்லை. எல்லாம் ஒன்றேயான பரபிரம்மமாக விளங்குகின்றது. உலகக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஞானியானவன் இந்நிலையில் சர்வ வல்லமை உள்ளவனாக விளங்குகின்றான்.
பரமாத்மாவே தெய்வமாகவும், பிராணணாகவும் மற்றும் அறிவாகவும் எல்லோருடைய உள்ளத்திலும் விளங்குகிறது. இதைக் குறிப்பிடுவதற்கு தான் மூன்று இழைகளையுடைய பூணூல் அணியப்படுகிறது. வெளிப்படையான பூணூலை விட்டுவிட்டு பிரம்மபாவனையகிற பூணூலை துறவி அணிகிறான். ஞானியின் பூணூல் ஒரு போதும் அசுத்தமாகாது. ஞானமே சிகையாகவும் ஞானமே பூணூலாகவும் உடைய சிறப்புள்ளவர்கள் அவர்கள். ஞானத்தைபோல் புனித தன்மை அளிக்க கூடியது வேறு ஒன்றுமில்லை. அவனுக்கு பிராமணத்துவம் முழுவதும் (வேதம் முழுவதிற்கும் அதிகாரம்) சித்திக்கும் என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஞானசித்தியாவது ஈஸ்வரனை உள்ளத்தில் காண்பதாகும். அப்படி காண்பவர்களுக்கு அழியாத சுகம் உண்டு. மற்றவர்க்கு இல்லை.

சத்தியத்தையும் தவத்தையும் கைக்கொண்டு முயல்பவர்களுக்கு எள்ளில் மறைந்திருந்த எண்ணெய் போலவும், தயிரில் மறைந்திருந்த வெண்ணை போலவும், அரணிக்கட்டையில் மறைந்திருந்த நெருப்பு போலவும் சாதனையின் பயனாக மறைந்திருக்கும் ஆத்மா வெளித்தோன்றும். அந்த ஆத்மசாக்ஷாத்காரம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத ஆனந்த நிலை. அதை உணர்ந்து புத்திமான் முக்தனாகிறான். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடையப் படவேண்டிய பதவி.

ECO FRIENDLY GANESHA


ECO FRIENDLY GANESHA
DURING VINAYAGA CHATHURTHI
சரயுவின் கவிதைகள்    வே. ராமச்சந்திரன்  


அச்சில் வார்த்த பச்சை மண் மேனி 
அதற்கான எருக்க மாலை
அருகம்புல் பரப்பிய கோலமிட்ட பலகை
அமர்ந்து நீர் எமக்கு அருள்வீர் இன்றே !

யாமும் இங்கு வெற்றிலை வாழை தேங்காயுடன் 
இதமாய் கரும்பும் சேர்த்து பசும் பால் தயிர் நெய் 
சிறுநீர் சாணம் என கோமியம் செய்து உனக்கே 
பிடித்த மோதகம் லட்டூகம் வைத்து வஸ்திரம் அளித்து 
நினை வேண்டுகின்றோம் சரயுவின் குடும்பத்தினரே 
எமக்கு அருள்வாய் கணேசா!




This year' Ganesh Chathuthi was celebrated in the morning at 9 AM and as usual with the ecofriendly Ganesha.  Though It was raining yesterday afternoon in Bangalore we managed to get all that was required for the Pooja. Some photographs taken during the pooja.









Vinayaka Chathurthi 17th September 2015










Updation with the Ganesha at Home on this year's  Vinayaka Chathurthi 2017





நாங்கள் மாறவில்லை .




நாங்கள் மாறவில்லை .
சரயுவின் கவிதைகள்   

வே. ராமச்சந்திரன் 













காலை வேளையிலே கழனி சென்று
களை எடுத்து நீர் பாய்ச்சி மருந்தடித்து
உற்றானுக்கு மதிய அமுதமும் படைத்து
விளை முத்துக்களை அறுவடை செய்து
நன்னாளில் பொங்கலும் படைத்து
நம் பாரம்பரியத்தை காக்கும் நாங்கள் மாறவில்லை!
ஆயின் கல்வி கோவில்களில் ஞான அமுது பெற
அனுப்பி வைத்த வாரிசுகளோ மாறினரே இவ்வாறு
!

விவாக விவேகம் சரயுவின் கவிதைகள்


விவாக விவேகம்         சரயுவின் கவிதைகள்    வே . ராமச்சந்திரன் 

இருவர் சேர இரு குடும்பங்கள் இரவு பகலாய்
சிந்தித்து, முடிந்தவரை அலசி ஆராய்ந்து 
உறவினர் நண்பர் என பலரிடம் கலந்து பேசி
நல்ல நேரமும் கணித்து செய்த விவாகமானாலும் 
இதில் குற்றம் அதில் குற்றம் என தவறே கண்டு 
சர்ச்சை செய்து நொடிபொழுதில் முடிவு செய்து 
பிரிவதை அன்றாட காட்சியாய் நாம் பார்க்கின்றோம்!

நாங்கள் அப்படியல்ல என்று மார்த்தட்டி, பல வருட
பழக்கத்தின் நட்பு மூலம் தெரிந்துகொண்டோம் 
புரிந்து கொண்டோம் ஒருவரைஒருவர் என்று கூறி 
விவாகமும் புரிந்து கொள்வார்அடுத்து சந்திக்க 
நேர்கையிலே இருவரும் ஒருவராய்
வாழாதது காண்கிறோம்! இவர்களும் பிரிந்தே வாழ்கின்றனர்!

இருவருக்கும் பிடித்தவை எவை என பல 
மணி நேரம் விவாதித்து எடை போடாதீர்!
மக்களே எவைகள் பொருந்தாது பிடிக்காது
(Incomptibilities )
என வரிசையிட்டு அவையில்
பலவற்றை ஏற்று சகித்துக்கொள்ளும் மனப்பாங்கு 
உண்டா என முதலில் காண்பீர்! சம்மதமும் 
பெறுவீர் விவாகத்திற்கு இருவரிடமும்எத்தகைய 
விவாகமும் வெற்றி பெரும் வாய்ப்பதிகம் !!  

Sunday, October 21, 2012

முதுமை சரயுவின் கவிதைகள்



முதுமை 



சரயுவின் கவிதைகள்  வே. ராமச்சந்திரன் 



 

தாய் தந்தையரால் எழுதப்பட்டு 
காலம் திருத்தங்கள் மேற்கொண்டு 
மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை 
என பறை சாற்றினாலும் இனி
ஒன்றும் இல்லை என அறிவிக்கும்
கடைசி அத்தியாயத்தின் சில வரிகள்.

விடியலில் எழுந்து பூங்கா நடையில்
வீரியம் கொண்டு நண்பர் குழாமுடன்
பொழுது கழிப்பினும் நேரம் கடத்த
முகப்புத்தகம் தன்னில் அஞ்சல் செய்து
நண்பர்கள் கூடே அளவளாவி 'விருப்பம்'
பெற்றும் கொடுத்தும் நாளும் போச்சே!.

விடிகாலை பத்திரிகை காப்பியும் போச்சு
தொலைக்காட்சி மயமாய் உட்கார்ந்தும் ஆச்சு
பக்தி திருவிழா முதல் பாட்டுக்கூத்து வம்பு வரை
சவால் விடும் வில்லிகள் கூவப் பேச்சினும் கேட்டு
பலத்த கைத்தட்டல் உரத்த பேச்சு கையால் பேசும்
நிகழ்வுகள் எல்லாம் மிகப் பழகியும் போச்சே!  




சுருங்க நொறுங்க சாறாக உண்ணின் திடமாக
நூறு வயது காண்பீர் எனும் காலம் போய்
மருந்து மாத்திரையே உணவெனும் காலமும்
வந்தாச்சே! வாரிசுகள் நிழலினில் வளைய வந்து
விருப்பு வெறுப்புகள் தூர விலக்கி அமைதியுடன்
இறைப்பொருள் காணும் நேரமும் வந்தாச்சே!