Popular Posts

Wednesday, September 30, 2020

Drawings in Ambulimama K C Shivasankaran

 

K C Shivasankaran   19 07 1924 -  29 09 2020

Karatholuvu Chandrasekaran  Sivasankaran

Ambulimama

(Source: The Hindu, The News Minute, Deccan Herald and Wiki)

Who can forget the characters depicted for Vikram and Vedal of Chandamama?

Legendary artist KC Sivasankar who has contributed to the field of art for over 60 years, illustrating for popular children’s magazine Chandamama aka Ambulimama, passed away at his residence in Chennai on September 29. The artist, best known for illustrating the Vikram Vetala series was 97.




Sivasankar was born in 1924 at a village in Erode. His ancestors hail from the village of Karatholuvu near Dharapuram, Tamil Nadu.   His father was a teacher in the local school and his mother was a homemaker.   He developed an early passion for art.    In 1934, he moved to Chennai along with his mother and siblings where he would be discovered for his talents by his drawing teacher at school.  

About his admission to a 5-year art course at the reputed School of Arts, Sivasankar once said to an interviewer, he astounded Principal DP Roy Chowdhury with a brush technique that came naturally to him. When the Principal asked him where he had learnt it, Sivasankar says he kept quiet - “It is best to keep quiet at such moments. He straightaway admitted me to the second year.”

Immediately after passing out, in 1946, he joined the Tamil magazine Kalaimagal on a monthly salary of Rs.85. By 1952, he was earning Rs.150, but was also moonlighting for other magazines, making another Rs.150. That year, Nagi Reddi hired him for Chandamama, on a salary of Rs.350: on paper it was shown as Rs.300 only because Chithra, the chief artist, was drawing Rs. 350.

He created the legendary sword wielding King Vikram carrying the Vetala corpse slung across his shoulder around the sixties.    Sivasankar said Nagi Reddy used to remark that “Chithra (another artist) and Sankar are the two bullocks of Chandamama”.

Chandamama, a periodical magazine for children originally in Telugu, was founded by filmmakers B Nagi Reddi and Chakrapani in 1947. The magazine reached far and wide, being published in 13 Indian languages. 

In 1980, the multilingual magazines combined circulation crossed 9 Lakhs.

In 2007, 60 years after it was first published, the magazine was acquired by Geodesic, a Mumbai-based software services provider company, with an intent to digitise its content.

In 2013, Chandamama stopped publishing when the parent company ran into financial troubles.

In 2017, a volunteer driven effort began to revive and preserve the magazine for future generations.




A great artist, who lived among us and portrayed those wonderful pictures of Vikram and Vedal in Ambulimama - Prayers for his soul to attain Sadgati.




Thursday, September 17, 2020

Ramana virundhu Part I

 

Ramana virundhu Part I

I had posted on Bhagavan Sree Ramana Maharishi in Facebook on Thursdays and starting from 02 07 2020 and upto 17 09 2020, there were 12 postings all in Tamil.  All of these were from the books of Ramana Virundhu published by Ramanashramam and some have been edited to suit easy reading.  I intend to post some more in Faceboook, and form into a blogposting later.

முகநூலில் 02 07 2020 முதல் 17 09 2020 வரை, வியாழக்கிழமைகளில் பகவான் ஶ்ரீரமண மகரிஷியைப் பற்றி எழுதிய பதிவுகளை இங்கு பதிவு செய்துள்ளேன்.   இவை ரமணாச்ரம வெளியீடான ரமணவிருந்து என்ற புத்தங்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.

V Ramachandran

17 09 2020




அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

- ஶ்ரீஅருணாசல அக்ஷரமணமாலை

02 07 2020  1

Gurubhyo Namah

Who am I? நான் யார்?

பகவானது அன்பைப் பெற்ற அடியார்களில் ராமநாத தீக்ஷிதரும் ஒருவர்.  வேதங்கள் பயின்று கொண்டிருந்த இவர், மிகவும் பலஹீனமானவர், பூஞ்சை. உயரமும் நாலரையடி தான்.  காந்தியவாதி.  இராட்டையில் நூல் நூற்று வந்த துணியில் பகவானுக்கு கௌபீனம் அணியக் கொடுப்பார்.  வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்.  போலீஸார் இவரை மட்டும் கைது செய்யவில்லை.  அவரை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை.  உன்னிடம் நெருங்க போலீஸார் பயப்படுவார்கள் என்று பகவான் வேடிக்கையாக கூறுவார்.  அதே ஆஸ்ரமத்தில் ஆஜானுபாகராக ஒரு முரட்டு அடியாரும் உண்டு.  ஒரு முறை இந்த முரட்டு அடியார் தீக்ஷிதர் மீது கோபம் கொண்டு, அவரை அலாக்காகத் தலைக்கு மேல் தூக்கி,நான் யார் தெரியுமா” என்று கர்ஜித்தார். 

ஆனால் தீக்ஷிதரோ மிகவும் சாந்தமான குரலில், இதைத் தெரிஞ்சுக்கத்தான் எல்லாரும் இங்கே வர்றா என்றார். அவ்வளவு தான், முரட்டு அடியார் சாந்தமடைந்து நடையைக் கட்டினார்.

பகவான் ரமணரின் உபதேசமே நான் யார் என்ற விசார மார்க்கம் தானே!  இதனை தெரிந்து கொள்ளத்தானே உலகின் பல பாகங்களிலிருந்தும் அடியார்கள் பலர் வந்து, பகவானிடம் கேள்விகள் கேட்டனர்.  அடியார்களின் மனதில் இந்த உபதேசம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சி விளக்குகிறது.

- ரமண விருந்து பாகம் 3

09 07 2020  2

Gurubhyo Namah

மேலும் இரண்டு போர்வைகளை -கோசங்களை- சேர்த்துக் கொள்ள சொல்கிறீரே! சற்றாவது இரக்கம் காட்டக்கூடாதா?

மார்கழி மாதப்பனி; கடுங்குளிர்! கௌபீனதாரியாக பகவான் ரமணர் தரிசன மண்டபத்தில் உட்கார்திருந்தார்.   ஓர் அன்பர் மிகவும் இரக்கப்பட்டு கூறினார்- பகவானே! குளிர் கடுமையாக இருக்கிறதே! வெய்ஸ்ட் கோட் ஒன்றை அணிந்து போர்த்திக் கொண்டு உட்காரலாமே!  

     புன்முறுவலுடன் மகரிஷி கூறினார்: நீர் என்ன சொல்கிறீர்?   பாவம் இந்த ஆத்மா!   முதலிலேயே கனத்த ஐந்து போர்வைகளால் (கோசங்களால்) மூடப்பட்டு அவஸ்தைப்படுகிறது.   அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் இவை ஐந்துமே கனமாக ஆத்மாவை மூடிமறைத்துள்ளன..   நீர் மேலும் இரண்டு போர்வைகளை-கோசங்களை சேர்த்துக்கொள்ள சொல்கிறீரே!  சற்றாவது இரக்கம் காட்டக்கூடாதா?’  

எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு வேடிக்கையாக சொல்லிவிட்டார் பகவான்.  பகவானது ஒவ்வொரு சொல்லும்ஞான ஒளி வீசி நம்மை விழிப்படையச் செய்யும் அஸ்திரமாகும்.  

- ரமண விருந்து பாகம் 3  

16 07 2020   3

தசமன் கதை

ஆத்மா பிரத்யட்சமாக இருக்கிறது.  அதை அடைகிறேன் என்று செய்யும் முயற்சியானது தசமன் கதை போல முட்டாள்தனமாகும் என்பார் பகவான்.  ஓர் அடியார் பகவானிடம் அந்த கதையைப் பற்றிக் கேட்டார்.  பகவான் கூறினார் – பத்து புத்திசாலிகள் ஓர் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு சென்றனர். 

தாங்கள் பத்து பேரும் சரியாக இருக்கிறோமா என்று ஒவ்வொருவனும் எண்ணிக் கணக்குப் பார்த்தான்.  தன்னைச் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டு ஒன்பது பேர் மட்டும் இருப்பதாகக் கூறினர்.  அனைவரும் ஒருவனைக் காணவில்லை என்று துக்கப்பட்டு அழ ஆரம்பித்தார்கள்.  அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் இவர்களின் அழுகைக்கு காரணம் கேட்டறிந்து, விஷயத்தைப் புரிந்து கொண்டான்.  அவன் நீங்கள் பத்து பேர் இருக்கிறீர்கள், காணாமல் போன ஆளை நான் காண்பிக்கின்றேன் என்றான்.  அவர்கள் ஒருவாறு தேறி பத்தாவது ஆள் –தசமன்- எங்கே என்று கேட்டார்கள்.  அவன் பத்து பேரையும் வரிசையாக நிற்கச் சொல்லி எண்ணச் செய்தான்.  பத்து பேர் இருப்பதை நிரூபித்துவிட்டுச் சென்றான்.  காணாமல் போன தசமன் கிடைத்துவிட்டதை அறிந்த பத்து பேரும் சந்தோஷப் பட்டனர்.  காணவில்லை என்று அழுதபோதும், பிறகு கிடைத்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்ட போதும் அங்கு பத்து பேர் இருந்துகொண்டுதான் இருந்தார்கள். 

ஆகையால் இந்த தசமன் கதையைப் போல பிரத்யட்சமாக இருக்கிற ஆத்மாவைத் தேடுகிறேன் என்று செய்கிற முயற்சி முட்டாள்தனமாகும் என்று கூறினார் பகவான். 

இந்த தசமன் கதைக்கு தத்துவரீதியான விளக்கம் கைவல்ய நவநீதம் என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பத்து பேரை எண்ணும்போது தன்னைச் சேர்த்துக்கொள்ள மறந்த மயக்கமே அஞ்ஞானமாகும்.

2. பத்தாவது மனிதனைக் காணவில்லை; அவன் இல்லை என்பதே அறியாமை நீங்காத ஆவரணமாகும்.

3. தசமனைக் காணவில்லை என்று துக்கப்பட்டு அழுதது  விட்சேபமாகும்.

4. வழிப்போக்கன் பத்தாவது மனிதன் இருப்பதாக கூறியதை நம்பியது பரோட்ச ஞானமாகும்.

5. வழிப்போக்கன் ஒன்பது பேர்களை எண்ணிய நீயே பத்தாமவன் என்று கூற தன்னை தசமனாக் கண்டது அபரோட்ச ஞானமாகும்.

6. அழுகை நீங்கியதே துக்க நிவர்த்தியாகும்.

7. உண்மை விளங்கி உள்ளத்தில் சந்தேகம் தீர்ந்ததே தடையற்ற ஆனந்தமாகும்.

- ரமண விருந்து பாகம் 3 

 

23 07 2020    4

விக்ரக வழிபாடு தவறா?

1938ஆம் ஆண்டு சிம்லாவிலிருந்து பகவானை காண வந்திருந்த வைணவ அடியார் ஒருவர், தன் தினப்படி ஆராதனைக்கு விக்ரங்கள் கொண்டு வந்திருந்தார்.  மிக பயபக்தியுடன் அந்த விக்ரகங்களை பகவானிடம் கொடுத்தார்.  அவரும் அவற்றை சிரத்தையுடன் கூர்ந்து பர்த்தார்.  ஒரு நாள் அவர் பகவானிடம், பலர் தன்னை விக்கிரக ஆராதனை செய்யும் மூடநம்பிக்கை உள்ளவன் என்ற நிந்தித்து அவமதிக்கிறார்கள் என்றார்.   இதற்கு பகவான் `நீங்கள் தான் என்னைவிட மோசமான விக்ரக வழிபாட்டு ஆசாமிகள்` என்று நீர் எதிர்வாதம் செய்ய வேண்டியது தானே என்றார்.   `அவர்கள் தினமும் தங்கள் உடலை அபிஷேகம் செய்வித்து, ஆடைகளால் அலங்கரித்து, உணவு படைத்து ஆராதிக்கவில்லையா?  சரீரமே எல்லாவற்றையும்விட பெரிய விக்ரகம் ஆயிற்றே!   அப்படியிருக்க விக்ரக ஆராதனை செய்யாதவர் யார் என்றார்.  மிக அற்புதமான பதில் கேட்ட வைணவ அடியாரும், மகிழ்ச்சியுற்று, திடநம்பிக்கையுடன் சிம்லா திரும்பினார்.

-  ரமண விருந்து பாகம் 3 

30 07 2020 5

Gurubhyo Namah

Namaskaram to Friends
அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

- ஶ்ரீஅருணாசல அக்ஷரமணமாலை

 

நமக்கு நிகழ்காலத்தைப் பற்றியே சரியா தெரியாதே?
திரோபாவம்  

கடவுள் ஐந்து தொழில்களைப் புரிகிறார். அவை முறையே படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் (அழித்தல்), அருளுதல் ஆகும்.  இவற்றில் மறைத்தல் தொழிலே திரோபாவம் என்று கூறப்படுகிறது.  இதனால் நம்முடைய முற்பிறவிகளைப் பற்றியும் இனி வரப்போகிற பிறவிகளைப் பற்றியும் நமக்கு தெரியாதவாறு கடவுள் மறைத்திருக்கிறார். இது ஏன்?  ‘கடவுள் தயாமூர்த்தி ஆனதால் மனிதர்களிடமிருந்து முற்பிறவி அறிவை மறைத்தருளினார். நாம் முற்பிறவியில் ந்நல்லவர்களாக இருந்திருந்தால் இப்பிறவியில் கர்வம் ஏற்படும்.  தீயவர்களாய் இருந்திருந்தால் தாழ்வு மனப்பான்மை,வருத்தம் முதலயன ஏற்படும்.’

‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே?  இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்து கொண்டு மேலும் ஏன்  துன்புற வேண்டும்?’

‘உறக்கம் உயிர்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.  உறக்கம் இல்லையாயின் வாழ்க்கை சீக்கிரமே சகிக்க முடியாததாகிவிடும். இதைப் போலவே கடவுளது திரோபாவம் என்ற மறைக்கும் தொழிலும் ஆகும்.’

கடவுளின் பிறதொழில்களான படைத்தல், காத்தல், ஒடுக்குதல், அருளுதல், ஆகிபவை போன்றே இதுவும் முக்கியமானதாகும்; நல்லதே ஆகும்.

 -  ரமண விருந்து பாகம் 3 

 

06 08 2020   6

Namaskaram to friends

Gurubhyo Namah

Om Namo Bhagavathe Sree Ramanaya

தன்னை அறிய இரு வழிகள்

ஒரு தடவை டாக்டர் சையது என்ற அன்பர் பகவானைக் கேட்டார், ‘சுவாமி! பூரண சரணாகதியில் ஒருவன் மோட்ச இச்சையும், கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையையும் கூட விட்டொழிக்க வேண்டுமல்லவா?’

பகவான், ‘பூரண சரணாகதியில் உன்னுடைய இச்சை என்று ஒன்று இல்லை. எல்லாம் கடவுள் செயல் என்று உன்னை பூரணமாக அவரிம் ஒப்படைத்துவிட வேண்டும். உன் செயல் உன்னிஷ்டம் என்று எதுவும் இல்லாத நிலையே சரணாதியாகும்’ என்று கூறினார். 

டாக்டர் சையது, ‘சுவாமி சரணாகதி என்பது என்னவென்று இப்போது புரிந்து கொண்டேன்.  பூரண சரணாகதி நிலயைப்பெற நான் என்ன செய்ய வேண்டும்?  அதற்கு ஏற்ற வழி யாது?’ என்று கேட்டார். 

பகவான், சரணாகதி நிலையை அடைய இரண்டு மார்க்கங்களே இருக்கின்றன.

‘முதலாவது  நான் என்ற அகந்தை எங்கிருந்து உண்டாகிறது, என்பதை ஆராய்ந்து அதன் மூலத்தை நாடி அதோடு ஒன்றித்துப் போக வேண்டும்.  மற்றொன்று உன் இயலாமையை அறிந்து என்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் கடவுள் இச்சை என்று உன்னை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அகந்தையற்று இருப்பதே ஆகும்.  இவ்வாறு செய்வதால் உள்ள பொருள் இறைவன் ஒருவனே, மற்றபடி அகந்தை ஒழிய வேண்டுமென்பதை உணர்ந்து ஆத்ம சொரூபத்தில் நிலைத்துவிடலாம்.  முழு சரணாகதி என்பதே ஞானம் என்றும் மோட்சம் என்றும் கூறப்படுகிறது’.

-  ரமண விருந்து பாகம் 3 

 

13 08 2020   7

Gurubhyo Namah

தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்

சேர ஒழித்தாய் அருணாசலா

- ஶ்ரீஅருணாசல அக்ஷரமணமாலை

 

ஆசாரம் விடல் அனர்த்தமாம்

1950ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பகவான் மகாநிர்வாணம் அடைவதற்கு 2 நாட்கள்முன்பு, பகவானது பேச்சு மிகவும் அடங்கிவிட்டது.  அன்று பிற்பகல் பகவானது உறவினர் ஒருவர் அவர் அருகில் சென்று மிகுந்த துயரத்துடன் நின்றார்.  சற்றும் எதிர்பாராத வகையில் பகவான் அவரிடம்  மிகத் தெளிவாக பேசினார். ‘அப்பா சிரார்த்தம் பண்ணினாயோல்லியோ?’  மரணத் தருவாயில் இருந்த பகவான் அன்று அந்த உறவினருடைய தந்தையின் திவசநாள் என்பதை நினைவுடன் கேட்டிருக்கிறார்.  உறவினரும் செய்ததாகக் கூறினார். 

பகவான் மேலும் கேட்டார், ‘பித்ரு சேஷம் உண்ண தகுதியானவர்களான இன்னின்னார் அதற்கு வந்தார்களா?

அவ்வுறவினரும் எல்லாம் முறைப்படி நடந்ததாக கூறினார். 

பகவான் சாஸ்திரங்களையும், ஆசார நியமங்களையும் இந்துக்கள் விட்டுவிடுவதை ஒரு போதும் அனுமதித்ததில்லை. 

‘ஆசாரம்விடல் அனர்த்தமாம் என்று

அறைவோன் பாதம் வாழ்கவே’

என்று பகவானது அடியாரான சிவபிரகாசம் பிள்ளை அவர்கள் பாடியது எவ்வளவு உண்மை! 

-  ரமண விருந்து பாகம் 3 

20 08 2020   8

Gurubhyo Namah

Om Namo Bhagavate Sree Ramanaya

உபதேச சாரம்

1928-ம் ஆண்டு ஒரு நாள் முருகனார் சிவபெருமானது திருவிளையாடல்களை நூறு பாடல்களில் பாடி சிவனை துதிக்க விரும்பினார்.  இப்பாடல்களில் பகவான் ஶ்ரீரமணரை சாட்சாத் சிவனாகவே வருணித்துப் பாட விரும்பிய இவர், தாருகாவனத்து முனிவர்களுக்குச் சிவபெருமான் செய்த உபதேசத்தை பகவான் முப்பது பாடல்களில் பாடித் தரவேண்டுமென வேண்டிக் கொண்டார்.  அதன்படி முருகனார் ‘உந்திபற’ என்ற அமைப்பில் எழுபது பாடல்களைப் பாட, பகவான் மீதி முப்பது பாடல்களை ‘உபதேச சாரமாக’ இயற்றியருளினார்.

தமிழில் முதன் முதல் இயற்றப்பட்ட இந்த உபதேச சாரத்தைப் பின்னர் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, பகவானே தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும், மலையாளத்திலும்  மொழிபெயர்த்துப் பாடியருளினார்.  இந்த உபதேச சாரத்தை மலையாளத்தில் ‘கும்மிப் பாட்டாக’ பகவான் பாடியுள்ளார்.

-  ரமண விருந்து பாகம் 2

 

27 08 2020  9

Gurubhyo Namah

சிரத்தை வேண்டும்

(தவத்தின் பயன் தவமே; அதுவே முன்னேற்றம்)

ஜபம், தியானம் ஏதாவது ஒன்றை பகவான் உபதேசிக்க வேண்டுமென்று கேட்பவர்களுக்கு பகவான் தரும் பதில்:

“.... ஜபத்தையும் அதன் பயனையும் சிந்திப்பதற்கு முன் ஜபிப்பவன் யார், அதன் பயனை அடைவது யார் என்று  தெரிந்து கொள்ள வேண்டாமா?   இவ்வாறு தன்னையே பார்த்துக்கொள்ள கூடாதா?   இல்லை, ஜபத்தையோ, தியானத்தையோ உபதேசித்தால் அதையாவது ஒழுங்காக அனுஷ்டிக்கிறார்களா?  உடனே வெளிப்படையான ஏதாவதொரு பலனைக் காணாவிட்டால், இதனால் பலன் ஒன்றும் இல்லை, அபிவிருத்தி ஒன்றுமில்லை என்று அதை விட்டுவிடுகிறார்கள். தவத்தின் பயன் தவமே; அதுவே முன்னேற்றம்.  அமைதியுடன் ஒரு முகமாய் ஈடுபட வேண்டும். அதுவே முக்கியம்.   மந்திரத்தையோ, மூர்த்தியையோ வழிபடத்தொடங்கியவன் அதற்கே தன்னை முற்றிலும் ஒப்பிவித்துவிட வேண்டும்.  உரிய காலத்தில் அதனருள் தானே தெரியும்.  ஆனால் அவ்வளவு பொறுமை எங்கே இருக்கிறது?..... .”

-  ரமண விருந்து பாகம் 2

03 09 2020   10

Gurubhyo Namah

பகவான் இயற்றிய “உள்ளது நாற்பது” பகவானது உபதேசம் முழுவதையும் தன்னுள்ளடக்கியது. இந்நூல் ஏற்பட்ட வரலாறு பற்றி ஒருமுறை பகவானது அன்பரான டாக்டர் சையது என்பவர் பகவானைக் கேட்டபோது பகவான் கூறினார்:

“இந்த நூல் இயற்றப்பட்டது 1928 ஆக இருக்கலாம்.  சரியான தேதியும், மாதமும் முருகனார் குறித்து வைத்திருக்கிறார்.”  ஒருநாள் முருகனார் கூறினார்- சுவாமி! தாங்கள் அவ்வப்போது, பல பேருடைய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் முகத்தான் இயற்றிய பல பாடல்கள் இருக்கின்றனவே!  அவற்றையெல்லாம் தொகுத்து நாற்பது பாடல்களாகச் செய்து ஒரு பொருத்தமான தலைப்பில் புத்தமாக வெளியிட்டால் அனைவருக்கும் மிகவும் பயன்படுமே! 

“அதன்படி எனது பாடல்களில் ஏறத்தாழ முப்பதை முருகனார் சேர்த்தார்.  மேலும் பத்து பாடல்களை இயற்றி எண்ணிக்கையை நாற்பதாக்குமாறு வேண்டினார்.  சேர்க்கப்பட்டபோது கோர்வையாக இருக்க சிலவற்றை நீக்கி, அதற்கு பதிலாக மேலும் சில பாடல்களை இயற்றச் சொன்னார் முருகனார்.  ஆக இந்த நாற்பது பாடல்களும் ஒரே சமயம் இயற்றப்பட்டவை அல்ல.  பிறகு முருகனாரால் நீக்கப்பட்டவையோடு, இன்னும் சில பாடல்களைச் சேர்த்து நாற்பது பாடல்கள் கொண்ட ‘அனுபந்தமாக’ வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்த ‘உள்ளது நாற்பது’ பாடல்களைக் காவ்யகண்ட கணபதி முனிவர் ‘சத்தர்சனம்’ என்று சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். 

-  ரமண விருந்து பாகம் 2

 

10 09 2020   11

ஞானம் என்கின்ற அணுகுண்டு

(பக்தியானது ஞானமாதா, ஞானத்தின் தாய் என்று கூறப்படுகிறது)

ஒரு நாள் அடியார்களிடம் உரையாடும் போது, பகவான் ஞானத்தைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் கீழ்க்கண்டவாறு விளக்கியருளினார்.

1.     ஞானம் என்கின்ற சுடர், அண்டசராசரங்களையும், மலை போன்ற பஞ்சுப்பொதியைப் பொசுக்குவது போல பொசுக்கி எரித்துவிடும். 

2.     படைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான உலகங்களெல்லாம் வலிமையற்ற ‘அகம்விருத்தி’ (ego) என்ற அஸ்திவாரத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பதால், அவையாவும், ஞானம் என்கின்ற ‘அணுகுண்டு’ வந்து தாக்கும் போது, இடிந்து சரிந்து விழுந்து விடும்!

3.     சராணகதி என்று பேசுவதெல்லாம்  வெல்லத்தில் செய்த பிள்ளையாரைக் கிள்ளி அதையே அவருக்கு நைவேத்யம் செய்வது போலாகும்.  நீ உனது உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறுகிறாய்; அர்ப்பணம் செய்ய இவையெல்லாம் உனக்கு சொந்தமாக இருந்தனவா?  நீ எவ்விதம் சொல்லலாமென்றால், “பகவானே! நான் அஞ்ஞானத்தால் இவையெல்லாம் என்னுடையவென்று நினைத்திருந்தேன்; இவையாவும் உன் உடைமையே என்பதை நான் இப்போது அறிகிறேன்.  இனிமேல் நான் இவற்றை எல்லாம் என் உடைமைகளாக நினைக்கமாட்டேன்.”

4.     உள்ள பொருள் ஒன்று, அது ஆன்ம ஸ்வரூபமே; யான், எனது என்பதெல்லாம் அறியாமை என்று உணர்வதே ஞானமாகும்.

5.     ஆகையால் பக்தியும், ஞானமும் வேறானவையல்ல.  பக்தியானது ஞானமாதா, ஞானத்தாய் என்று கூறப்படுகிறது.        

-  ரமண விருந்து பாகம் 2

 

17 09 2020    12

Gurubhyo Namah

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது

அகத்தில் நீ இலையோ அருணாசலா

- ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

குமரானந்தகிரி

பகவானுக்குப் பல ஆண்டுகள் பணிபுரியும் பாக்யம் பெற்ற அணுக்கத் தொண்டரான குஞ்சு சுவாமி கேரளாவைச் சேர்ந்தவர்.  இவர் 1920ல் பகவான் ஸ்கந்தாச்ரமத்தில் வாசம் செய்யும் பொழுது வந்தவர். பகவானுடன் இருந்த அடியார்களில் சிறியவர். உருவத்திலும் சிறியவரே. இவருக்கு 1927ல் இமாசலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு ஒரு பெரியவரிடம் தீட்சை பெற்று ‘குமரானந்தகிரி’ என்ற தீக்‌ஷா நாமத்தைப் பெற்றார். 

திருவண்ணாமலைக்கு திரும்பிய இவர் பகவானிடம் இதைக் கூறினார்.  பகவான், அது எப்படியானலும் சரி, எங்களுக்கு நீ என்றும் குஞ்சுதான் என்றார்.  மிகவும் எளிய சுபாவம் கொண்ட இவர், பகவானிடம் ஈடு இணையற்ற பக்தி பூண்டவர்.  இவரின் ‘எனது நினைவுகள்’ என்ற புத்தகத்தில், பகவானுடன் தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த பல சுவையான நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளார்.

- ரமண விருந்து பாகம் 3