Shantipadas சாந்தி பாடங்கள்
எந்த ஒன்றையும் செய்யும் போது மன நிலை அத்துடன் ஒன்றி இருப்பது அவசியம். வெறும் புலமையால் உணர முடியாதது உபநிஷத்துகளின் உண்மை பொருள். குருவிநிடத்தில் பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடன் அணுகும்போது மட்டுமே அதை புரிந்து கொள்வதற்கு ஏதுவாகிறது. உபநிஷத்துக்களின் ஆரம்பத்தில் அதற்கான சாந்தி பாடங்கள் உள்ளன.
ரிக் வேதம்
ஓம் வாங்மே மனஸி பிரதிஷ்ட்டிதா I மனோ மே வாசிபிரதிஷ்ட்டிதம் I
ஆவிராவீர்ம ஏதி I வேதஸ்ய ம ஆணீஸ்த: I ச்ருதம் மே மா ப்ரஹாஸீ: I
அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி I ரிதம் வதிஷ்யாமி I
சத்யம் வதிஷ்யாமி I தன்மாமவது I தத்வக்தாரமவது I
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம் I
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II
பொருள்:
எனது பேச்சு மனத்தில் நிலைபெறட்டும்; மனம் பேச்சில் நிலைபெறட்டும்.
சுடரொளிப் பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக. மனம், பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்கு கொண்டு வருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை பகலும் இரவும் நான் சிந்திப்பேனாக. நான் வியாவகாரிக உண்மையைச் சொல்வேனாக, பாரமார்த்திக உண்மையை சொல்வேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும். என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும்.!
யஜுர் வேதம் (சுக்ல)
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே II
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II
பொருள்:
ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்திநின்று பூரணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கிறது.
யஜுர் வேதம் (கிருஷ்ண)
ஓம் ஸஹ நாவவது I ஸஹ நௌ புனக்து I ஸஹ வீர்யம்
கரவாவஹை I தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை II
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்கு பயனுள்ளதாக விளங்கட்டும். எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!
சாம வேதம்
கேன உபநிஷத்தில் இரண்டு ஷாந்தி பாடங்கள் கூறப்பட்டுள்ளன:
1. யஜுர் (கிருஷ்ண) ல் உள்ளது போல:
2.
ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாகப்ராணச் சஷூ: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி I ஸர்வம் ப்ரஹ்மௌபநிஷிதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம்
மேSஸ்து I ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸூ தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி
ஸந்து I I
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: I I
எனது அவயங்களான வாக்கு, பிராணன், கண்கள், காதுகள், மற்றும் எல்லா புலன்களும் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற இறைவனே எல்லாம். அந்த இறைவனை நான் மறுக்காதிருப்பேனாக. இறைவன் என்னை மறுக்காதிருப்பாராக. இறைவனிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும்.
உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடிகொள்ளட்டும்!
அதர்வண வேதம்
ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: I பத்ரம் பச்யேமாக்ஷபிர் யஜத்ரா: I
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: I வ்யசேம தேவஹிதம் யதாயு: I I
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வருத்த ச்ரவா: I ஸ்வஸ்தி ந: பூஷா விச்வ வேதா: I ஸ்வஸ்தி
நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி: I ஸ்வஸ்தி நோ ப்ரஹசஸ்பதிர் ததாது I I
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: I I
ஓம். தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். பூஜிக்க தகுந்தவர்களே! கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களை காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் நாங்கள் உங்களைத் துதிக்க வேண்டும். உங்களுக்கு நன்மை செய்த வண்ணம் நாங்கள் வாழ வேண்டும்!

No comments:
Post a Comment