Popular Posts

Thursday, December 19, 2013

பகவான் ரமணர் -முதல் பிக்க்ஷை - மகான்களின் வாழ்க்கையே உபதேசமல்லவா? - திரிபுர சம்ஹாரம் செய்தது யார்?

மகான்களின் வாழ்க்கையே உபதேசமல்லவா?
முதல் பிக்க்ஷை 




வேங்கடராமனாக 17 வயதில் திருவருணைக்கு வந்த பகவான் ரமணர் சகஜ ஞானியாக பிக்க்ஷைக்கு புறப்பட்டார். 
அவரே கூறியது: நான் ஆயிரம்கால் மண்டபத்தை நோக்கி செல்கையில் கோபுரம் சுப்ரமணிய ஸ்வாமி கோயிலில் இருந்த மௌன சுவாமிகள் ஒரு நண்பருடன் அங்கு வந்தார். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிக்கவில்லை. மௌன சாமிகள் சைகை மூலம் அறிவித்தார் - இந்த பையனைப் பார்த்தால் களைத்து போயிருக்கிறான் - சிறிது உணவு தேடிக்கொண்டுவந்து கொடு - என்றார் நண்பரிடம்.  அவ்வாறே எனக்கு சிறிது நேரத்தில் எனக்கு புளித்த நீராகாரமும் சோறுடன் ஒரு ஊறுகாய் துண்டமும் கிடைத்தது.      பஞ்சபக்குவ பரமான்னமும் அன்று கிடைத்த பிக்க்ஷைக்கு ஈடாகாது. பழைய சோற்றையும் ஊறுகாயையும் சாப்பிட்டு தண்ணீரும் குடித்தேன்.  அப்போது எனக்கு கிடைத்த திருப்தியையும் சந்தோஷத்தையும் என்றைக்கும் மறக்க முடியாது. இதுவே என் அப்பன் அருணாசலேஸ்வரன் எனக்கு அளித்த முதல் பிக்க்ஷையாகும்.  
- ஸ்ரீ ரமண விருந்து பாகம் 1 ல் இருந்து -

திரிபுர சம்ஹாரம் செய்தது யார்?

பகவான் ரமணர் திரிசூல மகாத்மியம் என்ற புராணத்திலிருந்து சில வெண்பாக்களுக்கு விளக்கம் தந்த பொழுது:
திருச்சுழி நாதனாகிய சிவனுக்கு பூமிநாதன் என்பது திருநாமம். அம்மனுக்கு சகாயவல்லி என்று பெயர். பூமிநாதனை ஒரு பாடல் இவ்வாறு விவரிக்கிறது. "பூமிநாதா உன்னை மகாவீரன், இணையற்றவன் என்று தேவர்கள் எல்லாம் ஸ்தோத்ரம் செய்கிறார்கள். திரிபுர சம்ஹாரத்திலே திரிபுர அசுரர்களை நீ உனது வல்லமையினால் யாருடைய சகாயமுமில்லாமல் தனித்து வென்றாய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இது உண்மையல்ல - நீ அர்த்தநாரீஸ்வரன்; பார்வதியை உன் இடது பாகத்தில் உள்ளவன். எங்கள் அன்னை சகாயவல்லியின் துணையில்லாமல் நீ எப்படி அசுரர்களை ஜெயித்திருக்க முடியும்?  அவளது சகாயம் இல்லாமல் நீ உனது வில்லை எப்படி இழுத்திருப்பாய்? அம்புதான் எப்படி எய்திருக்க முடியும்?"
அந்த வெண்பா மேலும் - "பூமிநாதா! நீ சிவன்! அசைவற்றவன்; மலை வடிவத்திலே இருக்கிறாய். ஆகையால் சக்தி ஸ்வரூபமான சகாயவல்லியின் உதவியுடன்தான் நீ இந்தக் காரியத்தை சாதித்திருக்க முடியும்?" என்று விவரிக்கிறது.

பகவான் இதை விளக்கி கூறும் பொது குரல் தழுதழுத்து, கண்ணீர் விட்டார். பரம பக்தரல்லவா பகவான்!   - ஸ்ரீ ரமண விருந்து பாகம் 1 ல் இருந்து -

No comments:

Post a Comment