பங்காரு திருப்பதி
கோவில் தீர்த்தம்
மலை உச்சியில் வேங்கடரமணன் சன்னிதி
கர்நாடகாவிலுள்ள கோலார் மாவட்டத்தில் அநேக சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. இதில் பங்காரு திருப்பதி மிகச் சிறப்புவாய்ந்ததாகும். இதன் அருகாமையில் தான் கோடிலிங்கம் கோவிலும், மிகத்தொன்மையான குருதுமலே விநாயகர் கோவிலும் உள்ளன.
இக்கோவிலின் தல வரலாறு
ப்ருஹு மாமுனிவரின் தரிசனம் சம்பந்தப்பட்டதாகும். இங்கு ப்ருஹு மாமுனிவர் தன் காலில் உள்ள கண்ணின் மூலமாக இறைவனை தரிசித்ததாக ஐதீகம். கோலார் - முல்பாகல் செல்லும் வழியில் கோடீஸ்வர் கோவிலில் இருந்து 8/9 km தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். அழகிய குன்றின் மீது அமைந்திருக்கும் இத்திருக்கோவிலில் திரு வெங்கடேஸ்வரனை ஒரு சிறிய கதவின் த்வாரங்களின் மூலமாய் பார்க்கலாம்- நேத்ர தரிசனம் என்று பெயர். அளவினில் சிறிதாய் தோன்றும் திரு வேங்கடேஸ்வர விக்ரகம் அழகு வாய்ந்ததாகும். குன்றின் மீது இருப்பதால் சிறிய வெளிப்பிரஹாரம் கொண்டது. திரு வெங்கடேஸ்வரனை தரிசித்த பிறகு இறங்கும் படிகள் தொடர்ந்து திரு பத்மாவதி தாயாரின் சந்நிதிக்கு செல்கிறது. ஸ்ரீஹரி இங்கு ஏகாந்த ஸ்ரீனிவாசராக காட்சியளிக்கிறார். லட்சுமி, பத்மாவதி தாயாராக இதன் தொடர் மலை குன்றில் காட்சி அளிக்கிறார்.
கோவிலுக்கு முன்வாசலிலுள்ள கருட சிற்பம் இக்கோவிலுக்கு அழகு சேர்க்கிறது. பங்காரு திருப்பதி கோவில் குட்டஹள்ளி எனும் இடத்தில் உள்ளது. இது இது பெங்களூரிலிருந்து 100 km/கோலாரிலிருந்து 29 km தூரத்தில் உள்ளது.
தரிசன நேரம்:
காலை: 6 முதல் 12 மணி வரை
மாலை: 4.30 முதல் 7.30 வரை
No comments:
Post a Comment