Popular Posts

Sunday, February 07, 2021

Ramana Virundhu Part II ரமண விருந்து பாகம் 2

 Ramana Virundhu Part II

ரமண விருந்து பாகம் 2

Part I of the subject was earlier posted in:

https://sarayutoayodhya.blogspot.com/2020/09/ramana-virundhu-part-i.html

Here in this blog, posting in Facebook after 17 09 2020 are posted.




24 09 2020       

Gurubhyo Namah

ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்

உன் சூதேயிது அருணசலா !

- ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

சுமையை இறக்கி வை

‘உலகைப் படைத்துக் காத்து, ரக்ஷிக்கும் பரம்பொருள் – கடவுள் இருக்கிறார்.  கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்து ரக்ஷிப்பவன் அவன்.  நமது சுமையை எல்லாம் சுமக்கும் அவனொருவன் இருக்க, அவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சாந்தியாக - நிம்மதியாக இரு,’ என்பது பகவானது உபதேசமாகும். 

ஒருவர் குடும்ப தொல்லைகளின் வேதனை தாங்காமல் பகவானிடம் முறையிட்டார்- ‘நமது கஷ்ட நஷ்டத்தை – சுமையெல்லாம் கடவுள் சுமக்கிறார் என்று கூறுகிறீர்களே!  எனது சுமையைக் கடவுள் ஏற்பதாகக் காணவில்லையே!  ஏன்?’

பகவான் கேட்டார், ‘நீர் திருவண்ணாமலைக்கு எப்படி வந்தீர்?’

அன்பர்: ஏன் ரயிலில் தான் வந்தேன்.

பகவான்: வரும்போது ஏதாவது மூட்டை முடிச்சு கொண்டு வந்தீரா?

அன்பர்: ஒரு டிரங்குப் பெட்டியுடன் தான் வந்தேன்.

பகவான்: அதை தலையில் வைத்துக் கொண்டிருந்தீரா; அல்லது மடியிலா?

அன்பர் சற்று பொறுமை இழந்தவராக- ‘அதை நான் ஏன் சுமக்க வேண்டும்?  ரயில் பெட்டியின் மேல் பலகை மீது தான் வைத்திருந்தேன்.’

பகவான் கூறினார், ‘இதே போல் குடும்ப பாரத்தையும் கடவுளிடத்தில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருமே!  இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?’ 

அன்பர் வெட்கி தலை குனிந்தார்.

 

30 09 2020

Gurubhyo Namah

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்

உனை யார் அறிவார் அருணாசலா.

- ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

சாத்வீக ஆகாரம்

ஒரு நாள் பகவான் சன்னிதானத்தில் அடியார்கள் பூண்டு சாப்பிடுவது நல்லதென்று பேசிக் கொண்டிருந்தனர். 

பகவான்: ஆம்!  பூண்டு வாதத்திற்கு நல்லது;  குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அது அமிர்தம் போன்றது.  பூண்டிற்கு அமிர்தம் என்ற பெயருமுண்டு.  என்றாலும், சாதகர்களுக்கு அது நல்லதல்ல;  அது தாமஸ குணத்தை வளர்த்து, மனச்சாந்தியை கெடுக்கும். 

ஓர் அன்பர்: பகவானே!   பூண்டிற்கு அமிர்தம் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

பகவான்: அதற்கு ஒரு விசித்திரமான கதையிருக்கிறது.  பாற்கடலில் அமிர்தம் கடையும் பொழுது, மோகினி வேடத்திலிருந்த மகாவிஷ்ணு முதலில் தேவர்களுக்கு அமுதை அளித்தார்.  ஓர் அசுரன் தங்களுக்கு அமிர்தம் மிஞ்சாமல் போகுமென்று பயந்து தேவர் வரிசையில் உட்கார்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டான்.  தேவர்கள் இதை மோகினிக்கு உணர்த்த, அவர் கையிலிருந்த கரண்டியால் அடிக்க, அது சக்ராயுதமாக மாறி, அசுரனின் தலையைத் துண்டித்தது. அவன் விழுங்கிய அமிர்தம் தரையில் சிந்திற்று.  அத்துளிகளே பூண்டு செடியாக வளர்ந்தன.   ஆகையால் பூண்டிற்கு அமிர்தம் என்றொரு பெயரும் ஏற்பட்டது.  அதற்கு அமிர்தத்தின் இயல்பு உண்டு. 

அசுரனின் தொண்டைக்குள் சென்று வந்ததால் தாமஸ குணத்தை ஏற்படுத்தும் தன்மையும் உண்டு. அது சாதகர்களுக்கு நல்லதல்ல.

சாதகர்கள் சாத்வீகமான ஆகாரத்தையே உட்கொள்ள வேண்டும்.

- ரமண விருந்து பாகம் 2

 

15 10 2020

Gurubhyo Namah

ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை

ஆளுவது உன் கடன் அருணாசலா

-ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

தீபாவளி

ஒரு தீபாவளியன்று பகவானது பக்தரான முருகனார் பகவானிடம் தீபாவளியின் விசேஷத்தை பாடலாகத்தர வேண்டினார். பகவான் இயற்றிய பாடல்கள்  -

1.    விருத்தம்

நரகுடல் நானா நரகுலகு ஆளும்

நரகனென்று சாவி ஞானத்திகிரியால்

நரனைக் கொன்றவன் னாரண னன்றே

நரக சதுர்த்தி நற்றின மாமே.

இந்த உடலே நரகமாகும். இந்த உடலைத் ’தான்’ என்று கருதுபவனே நரகாசுரனாவான்.  நரகன் யாரென்று விசாரித்து ஞானவாளால் அதை அழிப்பவனே நாராயணன்.  இதுவே நரக சதுர்த்தி எனும் நன்னாளாம். 

 

2.    வெண்பா

நரக உருவா நடலையில் வுடல

கிரக மகமெனவே கெட்ட – நரகனாம்

மாயா வியைநாடி மாயத்துத்தா னாயொளிர்த

தீபாவளியாம் தெளி. 

நரம் போன்ற இந்த உடலே ‘நான்’ என்று கருதும் தவறான எண்ணமே நரகனாவான்.  இந்த தவறான எண்ணத்தையழித்துத் தன் ஸ்வரூபமே ‘தான்’ என்று பிராகாசிக்க செய்வதே தீபாவளியாகும். 

- ரமண விருந்து பாகம் 2

 

22 10 2020

Gurubhyo Namah

கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்

காணுவது எவர் பார் அருணாசலா

-ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

Sri Kavyakanda Ganapati also known as Sri Vasishta Ganapati Muni was one of the closest to Bhagavan Sree Ramana Maharishi and he had written in Sanskrit Forty verses in Adoration of the Bhagavan with the title “Sree Ramanacatvarimsat”.  The following is one of verse from that.

जगदहं पर: स्फुरति मे त्रयं I

सदभिदं गिरा तव विसम्शयम् II

Jagadaham parah sphurati me trayam

Sadabhidam giraa tava visamshayam

உலகுயிறைவர் உளபொருண் மயமாய்

இலகும் உன்வாக்கால் எனக்கில்லை ஐயமே.

 

Undoubtedly by the word – the Universe, ‘I’ and the Supreme – these three sparkle in me as undifferentiated Existence.   This realization has been effected by the potent and powerful word of the Maharishi, which springs forth from his own direct realization. 

 

29 10 2020

Gurubhyo Namah

காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்

கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா

-         ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

Sri Kavyakanda Ganapati also known as Sri Vasishta Ganapati Muni was one of the closest to Bhagavan Sree Ramana Maharishi and he had written in Sanskrit Forty verses in Adoration of the Bhagavan with the title “Sree Ramanacatvarimsat”.  The following is one of verse from that.

अहमि योSनतर स्तममलं हृदि I

अनुभवेम भो स्तव कृपा यदि II

ahami yo’ntaras tam amalam hrudi

anubhavema bhos tava krupa yadi

அகத்தினு ளவிரும் அமலனை யுளத்தே

அகலா துறுவம், உன் அருளதாயின்.

With your grace, we experience in our heart the spotless one inside the ‘I’ and not merely by the sadhana.  It is by the very Grace and Compassion of the Master.

05 11 2020

Gurubhyo Namah

கிரி உரு ஆகிய கிருபைக் கடலே

கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா

 -ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

Sri Kavyakanda Ganapati also known as Sri Vasishta Ganapati Muni was one of the closest to Bhagavan Sree Ramana Maharishi and he had written in Sanskrit Forty verses in Adoration of the Bhagavan with the title “Sree Ramanacatvarimsat”.  The following is the first verse from that. 

 

वन्दे श्रीरमनार्षेराचार्यस्य पदाब्जम् I

यो मेSदर्शयदीशं भान्तं धवान्तमतीत्य II

Vande sreeramanarsheraachaaryasya padaabjam

Yo medarshyadeesham bhantam dhvaantamateetya

இருளுக்கப்பாற் சுடரும் இறைவனை எனக்குக் காண்பித்த ஆசார்ய ஶ்ரீரமணமஹரிஷியின் பாதாதாரவிந்தத்தைப் பணிகின்றேன்.

I bow down at the Lotus Feet of the Master, the Seer, Shree Ramana who showed me god shining beyond the darkness.

(The Seer is one who sees the Reality, the Truth.  He has the vision. Not only he sees, he has the power to make others see in the same way.)

12 11 2020

Gurubhyo Namah

கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்

கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா

-ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை

Sri Kavyakanda Ganapati also known as Sri Vasishta Ganapati Muni was one of the closest to Bhagavan Sree Ramana Maharishi and he had written in Sanskrit Forty verses in Adoration of the Bhagavan with the title “Sree Ramanacatvarimsat”.  Following is the 6th verse from that.

नमतामतिभक्तिमतां निधीना

घनतापविधूननसन्निधिना I

यतिधर्मततिं परिपालयता

परितश्च तमो विनिवारयता II

Namatam atibhaktimatam nidhina

Ghanatapa vidhunanasannidhina

Yatidharmatatim paripalayata

Paritasca tamo vinivaryata

அன்பொடு வணங்குவார்க் கருதி யாயினான்

துன்பெலாந் துரத்துந் தூயஸந் நிதியான்

துறவுக்கோலந் தாங்கி நிற்போன்

அறவே யிருளை அகற்றி யாள்வோன்.

A treasure to those who bow down to him with exceeding devotion, his presence drives away the intense misery.  Maintaining the tradition of the ascetic code of conduct, he puts an end to the gloom all around.

 



No comments:

Post a Comment