சரயுவின் கவிதைகள்
குணக்குன்றாய் விளங்கிடுவோம்
மாணிக்கந்தன்னை தங்கப்பெட்டியில் பூட்டிடினும்
குப்பை தொட்டியில் கைதவறி விட்டிடினும்
குணக்குன்றாய் விளங்கிடுவோம்
மாணிக்கந்தன்னை தங்கப்பெட்டியில் பூட்டிடினும்
குப்பை தொட்டியில் கைதவறி விட்டிடினும்
அதன் மதிப்பினை கூட்டியோ குறைத்திட்டோ
மாற்ற இயலுமோ சொல்வீர் மானிடரே!
குணத்தில் உயர்ந்திடுவான் ஒருவனை
புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசிடினும்
அங்கீகரிக்காவிடினும் புறக்கணிப்பினும்
மாசு கற்பிக்க மும்மூச்சாய் முற்படினும்
ஆத்மா சோதனையாய் நெருப்பிட்டு
குன்றின் மீதிட்ட விளக்க்காகி ஒளி வீசுவர்!
குணத்தில் உயர்ந்திடுவான் ஒருவனை
புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசிடினும்
அங்கீகரிக்காவிடினும் புறக்கணிப்பினும்
மாசு கற்பிக்க மும்மூச்சாய் முற்படினும்
ஆத்மா சோதனையாய் நெருப்பிட்டு
குன்றின் மீதிட்ட விளக்க்காகி ஒளி வீசுவர்!
No comments:
Post a Comment