Popular Posts

Tuesday, November 10, 2015

மஹாஸ்வாமிகள் -- வேதமும் அங்கங்களும்


மஹாஸ்வாமிகள் -- வேதமும் அங்கங்களும்








வேதத்தின் ஆறு அங்கங்களுக்குஷடங்கங்கள் என்று பெயர். இதிலிருந்தே மத சம்பந்தமான அனைத்துக் காரியங்களுக்கும் சடங்கு என்ற பெயர் ஏற்பட்டது. அதையொட்டியான ஸம்ப்ரதாயங்களும் வேதத்தின் ப்ரகாரம் ஏற்பட்டவையேவைதீக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம் என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள்.

தமிழ்மறை என்று சொல்கின்ற குறள் முழுக்க, முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம்வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம்.அப்புறம் தான் வேதயக்ஞம்.   பித்ருக்களுக்குரிய தர்ப்பணமும், திவசமும் செய்தபின் தான் வேதபூஜை செய்யவேண்டும்.   இதே வரிசையை மாற்றாமல் திருவள்ளுவ்ரும் சொல்கிறார்-



தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்ற ஐந்து பேரையும் போஷிக்கவேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான் தென்புலத்தாரைச் சொல்லி அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார்யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதான வைதிக நம்பிக்கையையே மூதாதையர்களைதென்புலத்தார் என்கிறார்

No comments:

Post a Comment