Popular Posts

Sunday, July 03, 2016

சிவந்தது வானம்

சிவந்தது வானம் 
உதித்தது ஞாயிறு சிவந்தது வானம் 
கரைந்தது பறவை எழுந்தது உலகம்
விரைந்தது நேரம் திரண்டது மழலைகள்   
சென்றது பேருந்து மாணவ மணிகளுடன்  
அடித்தது மணி அப்பள்ளி வாயிலில் 
சிதறியது செல்வங்கள் நின்றது வரிசையில் 
பாடியது தேசிய கீதம் கலைந்தது வகுப்பறைக்கு 
நடத்தியது ஆசிரியை கேட்டது நம் செல்வங்கள் 
விட்டது இடைவேளை ஓடியது பெருங்கூட்டம் 
கேட்டது பெருஞ்ச்சத்தம் ஆர்ப்பரித்தது இளசுகள் 
சுவைத்தது சிறிய உணவை கூடியது அடுத்த வகுப்பு 
கொடுத்தது சின்ன கணக்கு செய்தது நம் பிறப்பு 
படுத்தியது ஒன்று குறும்பு கண்டித்தது அந்த ஷொட்டு 
கிடைத்தது வீட்டுக்கான படிப்பு கனத்தது அந்தப் பை
அடடா இனிய  ஓசை! ஓடியதுக் கூட்டம் 
கிளம்பியது பேருந்து கூச்சலுடன் "செல்ல" வழியனுப்பு 
பிரிந்த நட்புக்கு பிரியா விடை! வரவேற்பு அன்பு அன்னை 
சென்றது திசைக்கொன்றாக புத்தக காலணி இத்யாதி 
அரவணைப்பு தாய் கேட்ட கேள்வி நடந்தது இன்று என்னவென்று 
கூறியது புரிந்தது புரியாதவையை மகிழ்வுற்றது மா மனம் 
கலைந்தது பள்ளிச் சீருடை எடுத்தது மறு வேடம் 
சென்றது வெளியே விளையாடியது நண்பர் குழாமுடன் 
அழைப்பு வந்தது அன்னையிடம் இருந்து நின்றது விளையாட்டு 
செய்துகொண்டது உடல் சுத்தி துதித்து இறைவனை 
தொடங்கியது வீட்டுக்கான படிப்பு இனி இரவு உணவிற்கு முன்பே 
மறையுதே அந்த ஞாயிறு! சிவந்ததே வானம்!


  

No comments:

Post a Comment