Popular Posts

Friday, April 05, 2019

மஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) Part IV - நான்காம் பாகம்

ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்)Part IV - நான்காம் பாகம்





இந்த தலைப்பில் Part I, II & III முன்பே பதிவு செய்திருந்தேன்.  இது 4வது பாகமாகும்.


Dates given on top of each one is the date on which they were posted in FB and SOG of FB.

20 12 2018
மானசீக பூஜை (Contd)
அஷ்டபதி எழுதின ஜெயதேவஸ்வாமிகளைக் கைகளையும் கால்களையும் வெட்டி கிணற்றிலே தள்ளினா கொள்ளைக்காரா. அப்பவும் அவர் அவாளை சபிக்கலே.  தசாவதாரத்தையும் பாடிண்டிருந்தார்.  அதனாலே தான் சிவன்,, விஷ்ணு ரெண்டு பேர் தரிசனமும் அவருக்கு ரெண்டு தடவை கிடைச்சது.  அதோட அவரோட அஷ்டபதியை அரங்கேற்ற பெருமாளே வந்தார்.  பொறுமைக்கு பரிசு கிடைக்காமல் போகாது.  பொறுமை நான்காவது புஷ்பம்.

அசுத்தமான இடத்தைக் கண்டா முகம் சுளிக்கிறோம்.  மனசை  சுத்தமாக்க அசுத்த, அழுக்கு எண்ணங்களை மனசில் வந்து விழுந்த மறுகணமே தூக்கி எரியணும்.  நாக்கு பிறத்தியாரை புண்படுத்துகிற பேச்சுக்களை பேசாமல் இருக்கணும்.  சரீரம் எந்த விதத்திலும் களங்கப்படாமல் காப்பாத்தணும்.  குளிக்கிறதை விட அது முக்கியம்.  சௌசம் என்கின்ற இது தான் ஐந்தாவது புஷ்பம்.

27 12 2018
மானசீக பூஜை (Contd)
வள்ளளுவர் அழகாக சொல்லி இருக்கார்.   கோபத்தை காட்டக் கூடிய இடத்திலே காட்டாதேன்னு.  மத்தவா எத்தனை தூண்டினாலும் கோபத்தை வெளிவிடப்படாது.   கோபம், பாபம் சண்டாளம்னா  பெரியவா.  துர்வாசர் சிவனோட அம்சம்.  அவர் கோபத்தாலேயே தன் புண்ணியத்தை பல தடவை இழந்துருக்கார்
கோபத்தாலேயே புண்ணியம் கரைஞ்சுடும்.  கஷ்டப்பட்டு சேர்த்ததை விரைய மாக்கலாமா?  துர்வாசர் கதைக்கு வரேன்.  அம்பரீஷன் கிட்டே வந்து விருந்துக்கு வரேன்னு சொல்லிட்டு துர்வாசர் தாமசப்படுத்தினார்.   அம்பரீஷன் துவாதசிக் காலம் போயிடப் போறதேன்னு துளசி தீர்த்தம் சாப்பிட்டான்.   இதுக்காக தாம் தூம்னு குதிச்சார். கடைசியிலே என்ன ஆச்சு?   சுதர்சனம்  துர்வாசரை எல்லா லோகத்திலேயும் துரத்தினது.  அவருடைய கௌரம், மரியாதை எல்லாம் போச்சு. இப்படி கோபத்தாலே அழிஞ்சவங்க ஏராளமாயிருக்கா.  கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கறதுக்குப் பேர் அத்ரோஹம். இது தான் ஆறாவது புஷ்பம்.

17 01 2019
மானசீக பூஜை (Contd)
நாட்டுக்கு ஆனாலும் சரி, வீட்டுக்கு ஆனாலும் சரி, அதர்மமாக ஒரு காரியமும் செய்யப்படாது.   அதர்மமான சமாச்சாரத்தை நினைக்கவே மனம் கூசணும்.  இது ஹரீ என்கிற ஏழாவது புஷ்பம்.
உண்மையைத்தான் பேசணும். இது எட்டாவது புஷ்பம்.  தருமர் பீமன் கிட்டே கண்ணைக் காட்டி இருந்தால் போதும், அஸ்தினாபுரமே தரைமட்டமாயிருக்கும்.  ஆனா தருமர் அதை மனசாலே கூட நினைக்கலே!   அதனாலே தான் கீர்த்தியோட அலுக்கறவரை ராஜாவா இருக்கிற பாக்கியம் கிடைத்தது.  

அஷ்டாங்க லிங்கத்தை இந்த அஷ்ட புஷ்பங்களால் அர்ச்சனை செய்கிறவாளுக்கு சிரசின் உச்சி வழியாக ஜீவன் பிரியும்.  தியானம் தான் அக்னி. இந்த அக்னியால் அகங்காரம் அழியும்.  சிரசு வழியா உயிர் போனா மறுபடி ஜனனம் கிடையாது.  பகவானை ஏகாக்ர சிந்தனையோடு தியானிப்பது சாந்நித்யம்.பாத பூஜை செய்வதற்கான மந்திரத்தை சொல்லி தீர்த்தம் விடுவது பாத்யம்.   மந்திரம் சொல்லி பகவானை அழைக்கிறது ஆவாகனம்.  மானசீக பூஜைக்கும் இதல்லாம் உண்டு.  உதடு அசையாமல் மந்திரம் சொல்லணும்.  வரவழைத்த பகவானுக்கு மந்திரம் சொல்லி ஆசனத்தில் உட்காரும்படி கேட்டுக்கணும்.  தீர்த்தம் கொடுக்கிற மந்திரம் சொல்லி தீர்த்தம் விடறது அர்க்கியம். 

24 01 2018
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
பஞ்சைவ பூஜ்யம் லோ யஸ ப்ராப்னோதி கேவலம் I
தேவான் பித்ரூன் மனுஷ்யாம் ஸ்ச பிக்ஷூ நதி தி பஞ்சமான் II

இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் லோகத்துலே தேவா, பித்ருக்கள், மனுஷ்யா, யதிகள், அதிதிகள் இவா அஞ்சு பேரையும் பூஜிக்கிறவா சிரேயஸை அடைவான்னு சொல்றது.

யாகம், ஹோமம் எல்லாம் பண்ணினா தேவாளுக்குத் திருப்தியாகி வியாதி இல்லாமல், அகால மரணம் சம்பவிக்காமல் ஆசீர்வாதம் பண்ணுவா.  நாம அறியாமல் செய்த பாவம் தொலையும்.  அக்னியாலே, வெள்ளத்தாலே நஷ்டம் ஏற்படாது.  சந்ததிகள் செழிப்பாயிருப்பா.  திதி, தர்ப்பணம், மஹாளயம் இதெல்லாம் பித்ருக்களை திருப்தி பண்றத்துக்கு நியமிச்சது.  அடுத்தது மனுஷா.  தேவையானதை வாங்கிக்கிறோம்.  இன்னும் சொல்லப் போனால்  நிறைய சேமிச்சும் வைச்சுக்கிறோம். 

சுருண்டிருக்கற பாகற்காயிலே புழு இருக்கும். கத்தரிக்காய் அழுகலாயிருக்கும். நடவடிக்கையாலே இவன் கிட்ட அழுக்கான சுபாவம் புழுவா இருக்குன்னு தெரிஞ்சுண்டு ஒதுக்கலாம்.  திருத்த முடியாத சட்ட விரோதமான காரியங்களை செய்கிறவன் அழுகல்னு ஒதுங்கலாம். பழி வாங்கற நெனைப்போட அலையறவன் முத்தல் வெண்டைக்காய் மாதிரி.  பக்குவபடாதவன்.  அதனாலே மனுஷாளே வேண்டாம்னு நெனைக்கிறது தப்பில்லையா? இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்கணும்.  அதனாலும் மனுஷா கிடைப்பா!   நல்ல மனுஷாளோட உறவை சேமிச்சு வைசுக்க வேண்டாமா? 

14 02 2019
ராஜா அஸ்வபதியின் தத்துவம்
வேத சாஸ்திரத்தை கற்றுக் கொடுக்கும் மஹரிஷிகள் வருஷத்துக்கு ரெண்டு தடைவையாவது சந்திச்சு தங்களது சாஸ்திர ஞானத்தை கூர் தீட்டிப்பா.  ஒரு தடவை ஐந்து ரிஷிகள் ஆத்மாவை சொர்க்கம், சூரியன், காற்று, ஆகாசம், ஜலம்னு சொல்லி கருத்து ஒத்து போகலை.  எல்லோரும் அருண ஞாமகரிஷியோட பிள்ளை உத்வாலகர் கிட்டே போனா.  அவர் ப்ர்ஹம ஞானி, தவசி.  ரிஷிகள் வந்த காரணத்தை ஞான தி பொருஷ்டியிலேயே தெரிஞ்சுண்டார். உங்களோட சந்தேகத்தை என்னாலே தீர்க்கமுடியாது, கேகேய நாட்டு ராஜா அசுபதிகிட்டே போவோம்னு கூட்டிண்டு போனார்.  ராஜாவுக்கு ஆறு மகான்களையும் பார்த்ததும் சந்தோஷம். ராஜா அவர்களை உபசாரம் செய்து, ஆறு தட்டுகளில் பரிசுகள் வைத்து நமஸ்காரம் பண்ணினார்.  ரிஷிகள் அதை ஏறெடுத்தும் பார்க்கலே. ராஜா தயங்காமல் இதை ஏற்க்கலாம் என்று இவ்வாறு கூறினான்.  
ந மே ஸ்தேனோ ஜனபதே
ந கதர்யோ ந மத்ய ப:
ந அநாஹிதாக்னி: ந அவித்ய
ந ஸ்வைரி ஸ்வைரினீ குத 

இதன் அர்த்தம் நாட்டிலே எல்லோரும் வசதியாக இருக்கிறதாலே பொய், புரட்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லே. எல்லோரும் தானம், தருமம் பண்ணணுங்கற ஆசையோட இருக்கறவா.  மது அருந்தறவாளைப் பார்க்க முடியாது.  பிராமணர்கள் எல்லோரும் அக்னி ஹோத்ரம் பண்றவா.  எல்லோரும் வித்யாப்பியாசம் பெற்றவா. நேர்மை இல்லாத மனுஷாளை நீங்க பார்க்கவே முடியாது.  அதனாலே இந்த செல்வத்தை நீங்க தாராளமா எடுத்துக்கலாம். 
உத்தமமானவா நம்ம தானத்தை ஏத்துகணும்னா இத்தனை தகுதி இருக்கணும்னு தெரியறது.  ஒரு ராஜா நாட்டை எப்படி வைச்சுகணும்னு புரியறது. எல்லோரும் நல்லவாள அவர்களோட கடமையை செய்யணும்.
அப்ப தான் ராஜ காரியங்கள் ஒழுங்காக நடக்கும்.  உத்தாலக மகரிஷி ராஜாவிடம் தாங்கள் பொருள் கேட்டு வரலேன்னும், சந்தேகத்தை தீர்க்கும்படியும் கேட்டார்.  ஐந்து மகரிஷிகள் ஆத்மாவை சொர்க்கம், சூரியன், காற்று, ஆகாசம், ஜலம் என்று தனித்தனியே சொல்றா. நான் பூமியை ஆத்மாவா உபாசிச்சிண்டு இருக்கேன்.  நீங்கள் தான் தெளிவு படுத்தணும்ன்னார்.    
அசுவபதி அழகாக விளக்கினார்.  ஆத்மா உடம்புலே எந்த பாகத்துலே இருக்குன்னு யாராலேயும் சொல்ல முடியாது.  யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்றது வாய்.  அப்போ யோசிக்கிற மூளையாவும், பேசற வாயாவும், ஏன் அசையும் உள் நாக்காக்கூட இருக்கு. முக்கியமான சமாசாரங்களை கிரகிச்சுக்கிறப்போ காதாகவும், மூளையாகவும் இருக்கு.  பார்க்கறச்சே கண்ணாவும், மூச்சு விடறச்சே காற்றாவும் இருக்கு.  பார்வைதான் முக்கிய்ம்னு நெனைக்கறவா, சூர்யன்கறா.   மூளை தான் பிரதானங்கரவாளுக்குச ஆத்மா சொர்க்கமா தெரியறது. மூச்சு விடறது பெரிசுன்னா ஆத்மா காற்று.  ஆத்மா தங்கியிருக்கிற தேக்த்தை பிரதானமா நெனைக்கறவாளுக்கு ஆத்மா ஆகாசம்.  ஒரு  இடத்துல இல்லாம வெளிச்சமா, ஜலமா, பூமியா, காற்றா, ஆகாசமா இயங்கற ஆத்மா மாதிரி மனுஷா உலகத்திலே வாழணும்.  நல்லது செய்யணும்.

28 02 2019
ஒரு தடவை கைலாசத்துக்கு சிவதரிசனம் பண்ண வந்த விபீஷணன் உங்களோட பூஜையை எப்படிப் பண்ணணும்னு கேட்டிருக்கான். நமெக்கெல்லாமும் சேர்த்து சிவபெருமான் சொல்லி இருக்கறதாக சிவபுராணம் சொல்றது.  லிங்க வடிவத்திலே பூஜிக்கிறதிலே தான் ரொம்ப திருப்தியாய் இருக்குங்கிறார்.
அவிமுக்த ஸ்தலம் காசி.  அவரே தாரக நாமத்தை உபதேசம் பண்ணி மோட்சத்தைக் கொடுக்கிறார்.  ஓங்கார க்ஷேத்திரத்தைத் தியானிக்கரவாளுக்கே அஸ்வமேதயாகப் பலனைக் கொடுக்கறதாக சொல்லி இருக்கார்.  நர்மதை நதி தீர்த்தம் எப்போதும் லிங்கத்தின் மேலே விழுந்திண்டிருக்கு.  நர்மதையின் வடபக்கத்திலே இந்த ஸ்தலம் இருக்கு. இன்னொரு ஓங்கார லிங்கமும் உண்டு.  ஓங்கார ரூபத்திலே யந்திரம் வரைஞ்சு அதிலே மண்ணாலே லிங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணி விந்தியன் பூஜை பண்ணியிருக்கார்.  ஆறு மாசம் இடத்தை விட்டு அசையாம பூஜை செய்திருக்கார். சிவ பெருமான் கிட்ட அவர் கேட்டது மேருவை விட உசரமா வளரணும்னு. அகஸ்தியரால அது தடைப்பட்டுப் போச்சு. இந்த லிங்கமும் ஓங்காரேசுவரர் தான்.  கோகர்ண லிங்க பூஜையையும், தரிசனத்தையும் தனக்குப் பிடிச்சதா சொல்லி இருக்கார். ரொம்ப சக்திவாய்ந்த லிங்கம்.  பத்ரிகாசிரமத்திலே நர நாராயணா மண்ணாலே சிவலிங்கம் பிடிச்சு கேதாரேஸ்வரராக அனுக்ரஹம் பண்றார்.   மதுரை சுந்தரேஸ்வரரும் ஸ்வயம்பு மூர்த்தி.  அதுவும் அவருக்கு பிடிச்ச இடமா சொல்லி இருக்கார். அடுத்ததாக கமலாலயத்தைப் பிடித்ததாக சொல்லி, அங்கே மரணமடைஞ்சா நேரே சிவலோகப்பதவி தந்துடறேங்கரார்.  இராமேஸ்வரம் ரொம்ப விஷேஷம்.   இராமர் பிரதிஷ்டை பண்ணின லிங்கம், பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்கும்.

பிராகையிலே நூறு வருஷம் ஸ்நானம் பண்ற பலனை இந்த மாதிரி க்ஷேத்திரத்திலே சிவ பூஜை பண்றவாளுக்குக் கொடுக்கறேங்கிறார். பொன் தானம் செய்கிற பலன் சிவ பூஜையிலே கிடைக்கிறது.  நூறு தடவை  . பிராயச்சித்த விரதம் செய்த பலனும், திலதானம் செய்த பலனும் சிவ பூஜையில் கிடைக்கிறதுன்னும் அவரே விபீஷணன் கிட்டே சொல்லி இருக்கார்.
பால் அபிஷேகம் செய்தால் பாப்மெல்லாம் அழியும்.  அஷ்டமி, சதுர்த்தசி ரெண்டு நாளிலும் எட்டு ஜாமுமம் இடைவிடாம அபிக்ஷேகம், அர்ச்சனை செய்கிறவாளுக்கு நினைச்சது நடக்கும்.  ஒரு மாசம் கோபமில்லாம விதி முறைப்படி சிவபூஜை செய்கிறவாளுக்கு சதுர்வேதங்களையும் பாரயணம் பண்ணின பலன் கிடைக்கும். 

விபீஷணன் பகவானை நமஸ்காரமும், ஸ்தோத்திரமும் பண்ணிட்டு இலங்கை வந்தான். அஷ்டமி, சதுர்த்தசி எட்டு ஜாமமும் பூஜை பண்ணி, அஷ்டமா சித்திகளும் வரணுமேன்னு நெனைச்சான்.  ஒரு ரிஷி வந்து அவனுக்கு அஷ்ட சித்திகளையும் கற்றுக் கொடுத்தார்.  இராவணன் மட்டுமில்லே, விபீஷணனும் சிவ பூஜை பண்ணி இருக்கிறான்னு தெரியறது.

14 03 2019
ஜைன கவி அமரசிம்மன் இயற்றிய நிகண்டு அமரகோசம்.  வேறெந்த தெய்வத்துக்கும் ஸ்வாமி பட்டம் கொடுக்காமல், சுப்ரமண்யருக்கு மட்டுமே ஸ்வாமி பட்டம் கொடுத்திருக்கார், அமரசிம்மன்.  தேவ ஸேனாபதி; சூரஸ்வாமி கஜமுகாநுஜ:’ என்று அர்த்தம் சொல்லி இருக்கார்.   தகப்பனுக்கே பாடம் சொன்ன ஸ்வாமிநாதனாயிற்றே!  பிள்ளை சொல்லும் விஷயங்களைப் புதுசு போல் கேட்டு, பிள்ளையை உயர்த்துவது லோக வழக்கம்.  பரமசிவனும் அதையே தான் செய்திருக்கார்.  மாமனாரான தக்ஷன் தலையை வெட்ட உத்தரவிட்டவர், பிள்ளையிடம் மண்டியிட்டு வாய் பொத்தி உட்கார்ந்து பாடம் கேட்கிறார்.

திருமறைக்காட்டிலே மூடியிருந்த கதவு திறக்க பத்து பாடல்களைப் பாடினார் திருநாவுக்கரசர்.     மறுபடி கதவு மூட சம்பந்தர்சதுரம் மறைஎன்கிற ஒரு பாடலைத்தான் பாடினார்.   இதைப் பார்த்து அப்பர் பெருமான் வருத்தப்பட்டார்.  சம்பந்தர் அவரை சமாதானப்படுத்த வேறே வியாக்கியானம் சொன்னார்.  பிள்ளைக்கு இளகி விடுகிற அப்பா தான் ஈஸ்வரன். 

அந்த ஈஸ்வரனுடைய அவதாரம் தான் ஆதிசங்கரர்.  அவராலே காப்பாற்றப்பட்ட பொக்கிஷம் தான் அமரகோசம்.  ஆதிசங்கரர் பாரத தேசம் பூரா பயணம் பண்ணி ஹிந்து மதத்தை பரப்பினார்.   அப்போ அமரசிம்மனையும் சந்தித்தார்.  இரண்டு பேருக்கும் நிறைய தர்க்கம் நடந்தது.   அமரசிம்மன் வாதத்திலே தோற்று போனான்.  இனிமே தான் எழுதின புத்தகத்தை யார் மதிப்பா?  தன்னோட புத்தகம் அவமானப்படறதைவிட அழிஞ்சு போகட்டுமின்னு அக்னியிலே போட்டு எரித்தான்.  கேள்விப்பட்டு ஆதிசங்கரர் ஓடி வந்தார்.
கடைசியாக அவன் கையில் இருந்தது நிகண்டு மட்டுமே!  அதை அவனிடமிருந்து பிடுங்கி காப்பாற்றினார்.  அவராலே நிகண்டுவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.  கோசம்னா பொக்கிஷம்.

21 03 2019
அந்தக் காலத்துலே  சிதம்பரத்துக்கு கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்கப் போகிற விஷ்ணு பக்தாள் நடராஜப் பெருமானைப் பார்த்துட கூடாதுன்னு விசிறியாலே மறைத்துக் கொள்வார்களாம்.   காகபுஜண்டர் என்கிற மகரிஷி அப்படித்தான் இருந்தார்.    அவரோட குருவுக்கு அந்த வித்தியாசமெல்லாம் இல்லை.  வைகுண்ட ஏகாதசி தினம், விஷ்ணு ஸகஸ்ர       நாமத்தைப் பாராயணம் பண்ணின குருநாதர் மேலே புஜண்டருக்கு கோபம்.  குருநாதர் வருகிறது தெரிந்தும் எழுந்து நிற்கவில்லை.  முகத்தைத் திருப்பிக் கொண்டார்.  குரு வேண்டுமானால் சிஷ்யனை சகிச்சுக்கலாம், தொண்டனை அலட்சியம் பண்ணினா தெய்வம் பொறுத்துக்காது.  

“அடே மூடா!  உனக்கு தண்டனை கொடுக்காட்டா லோகத்திலே குருபக்தி குறைஞ்சிடும், குரு வருகிறார் என்று தெரிந்தும் மலைப்பாம்பு போல அசையாமக் கிடந்த நீ, மரப் பொந்துலேயே பாம்பா விழுந்துகிட”  என்று உஜ்ஜயினி மகாகாளர் சன்னிதியிலிருந்து
அசரீரி ஒலித்தது.   குருநாதரே இதைக்கேட்டு நடுங்கிப் போய்விட்டார்.   “மகாகாளரே!  புஜண்டனை மன்னிக்கணும்.   இளம் வயசு.  தெரியாமப் பண்ணிட்டான்.  சாப விமோசனம் வாங்காம இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்” என்று குரு பிரார்த்தனை பண்ணினார். 
“பக்தா! உனக்காக உன் சீடனுக்கு ஒரு சலுகை அளிக்கிறேன்.   ஆயிரம் பிறவி நிச்சயம் எடுத்தாகணும்.  ஜனன-மரண ஹிம்சை இருக்காது.  எல்லாப் பிறவிலேயும் தத்துவ ஞானத்தோடு இருப்பான்”.   இது போதாதா குருவிற்கு.

புஜண்டருக்கு தனியாக ஒலித்தது அசரீரி – எப்பேர்பட்ட குருவை அடைஞ்சிருக்கே!  குருவுக்கு பண்ணின அவமரியாதைக்கு பரிகாரம் ‘ராம நாமா’ தான் என்று முடித்தது.  999 ஜன்மாக்கள் முடிந்து சிறு பையனாக புஜண்டர் லோமச ரிஷி முன்னாலே நிற்கிறார்.  ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியோட பாத சேவை பண்ணணும் என்று ரிஷியிடம் யாசிக்கிறார்.  ரிஷி எத்தனையோ புத்தி சொல்லிப் பார்த்தார்.  பிடிவாதம் ஆபத்தில் முடியும் என்று சொல்லியும் புஜண்டர் கேட்கவில்லை.  “நீ காக்காயாகப் போ” என்று சபித்துவிட்டார்.   புஜண்டர், காகபுஜண்டர் ஆயிட்டார்.  இது அவருக்கு ஆயிரமாவது ஜென்மம். ரிஷியை நமஸ்காரம் பண்ணிணார்.  அதோட தலையிலே கை வைத்து தாரக மந்திரத்தை உபதேசம் பண்ணிணார் லோமசர்.  “நீ நினைக்கிற ரூபம் எடுக்கலாம்.  பீஷ்மர் மாதிரி நீ விரும்பும் போது மரணம் வரும்” என்று இரண்டு வரத்தையும் கொடுத்தார்.      

28 03 2019 
பஞ்ச தசாக்ஷரியின் நாலாவது எழுத்துத்தான்’.  லகார ரூபாயைஎன்று அர்ச்சனை பண்ணுகிறோம்.    லஹரின்னா வரிசை.   பண்டாசுரனை வதைத்தவள் லலிதை.   த்ரிசதியிலே 64வது ஸ்தோத்திரம் லாகினீ.   இந்த லாகினீ என்கிற பேர் லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் 503வது  நாமாவளியாக வரும்.  அடுத்த வாக்கியம் பெண்களெல்லாம் அம்பாள் சொரூபம் என்கிறது.   ஸ்த்ரீகள் வடிவிலே   பிரத்யட்சமாய் காணப்படுபடுகிறவள் அவள்.  மலர்ந்த மாதுளம் பூவும், பாதிரிப்பூவும் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறாள் என்கிறது அடுத்த வரி.  
அர்த்தம் புரிஞ்சாதான் ரசிக்க முடியும்.  நெத்திச்சுட்டி பிரகாசிக்கிறது என்கிறது அடுத்த நாமாவளி.  கிருஷ்ணர்  நெத்திச்சுட்டியோட அலைந்தார்.  நெற்றிக் கண்ணுடைய  ருத்திரனால் அவள் பூஜிக்கப்பட்டாள் என் கிறது அடுத்த ஸ்லோகம்.  சௌந்தர்யலஹரியிலே முதல் 41 ஸ்லோகமும் சிவபெருமான் பண்ணினதுதான்.   ஆதிசங்கர பகவத்பாதாள் அதை எடுத்துக்கொண்டு வரும்போது நந்தி பார்த்து பிடுங்கறார்.   ஆசார்யாள் கைக்கு வந்தது 41.  மீதி 59ம் அவர் வாக்கிலேயிருந்து வந்தது.  இது சௌந்தர்யலஹரி.   கைலாசத்திலிருந்து வந்த 41ம் ஆனந்தலஹரி.  

04 04 2019
ஈஸ்வரியின் ஆயுதங்களிலே ஒண்ணு கலப்பை.  கலப்பைன்னதும் முதல்லே நினைவுக்கு வரது பலராமர் தான்.   அவர் ஆதிசேஷ  அம்சம்.  அவளும் நாகேஸ்வரி.  கிருஷ்ணருக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் துரியோதனன்  குமாரியின் மேலே ஆசைப்பட்டு அவளைத் தூக்கிண்டு போயிட்டான்.  விடுவார்களா? பிடிச்சு உள்ளே போட்டுட்டா.    இது தெரிஞ்சதும் யாதவப் படை கிருஷ்ணர் தலைமையிலே புறப்பட்டது.  பலராமர் தடுத்துட்டார்.  இதுக்கெதுக்கு யுத்தம்?  துரியோதனன் என்னோட சிஷ்யன்.  சொன்னா விட்டுவிடுவான்னு கலப்பையோட புறப்பட்டு வந்தார்.    நேரா அஸ்தினாபுரம் போகாமல் வழியிலே ஒரு தோட்டத்தில் தங்கி, தான் வந்திருக்கிறதை சொல்லி அனுப்பினார்.  பீஷ்மர், கர்ணன், துரியோதனார் எல்லாரும் வந்து மரியாதை பண்ணினா.  சாம்பனை விடுதலை பண்ணணும்னு எங்க தாத்தா உக்கிரசேன ராஜா சொல்லி அனுப்பினார்-னார் பலராமர். அதெல்லாம் முடியாதுன்னு எல்லோருமா சொன்னா!

பலராமர் ஆதிசேஷன் அம்சமாச்சே!  கோபம் வந்து தரையை உதைச்சார்.  பூமி பிளந்தது.  கலப்பையை எடுத்து கோட்டை மதில்மேல் மாட்டி இழுத்தார்.  பூகம்பம் வந்த மாதிரி இருந்தது.  எல்லோரும் மன்னிப்புக் கேட்டா.  சாம்பனைத் தன் புத்திரியோட ஒப்படைக்கிறதா துரியோதனன் ஒத்துக்கொண்டதாலே கலப்பையைத் திருப்பி எடுத்துண்டார் பலராமர். 

அம்பாள் கலப்பையோட இருக்கிறது, குடியானவாளுக்கு கிருபை பண்ண.  ஜனங்களோட மனசுலே இருக்கிற கல்மிஷங்கற கட்டிகளை கரைக்க, புத்தியைப் பதப்படுத்தறத்துக்காக.

No comments:

Post a Comment