ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு
As I had opined in Sage of Kanchi, the group in Facebook, I have started posting in my blog from today the 11th January 2015.
12 01 2014 முதல் இது வரை எழுதி வந்த மஹாபெரியவாளின் அருள்வாக்கு இன்றுடன் 108 பூர்த்தியாகிறது. முன்பே கூறியிருந்தபடி என்னிடம் உள்ள பல புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்தவற்றை ஸேஜ் ஆஃப் காஞ்சியில் (Facebook group) பதிவு செய்து வந்தேன். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். இந்த 108 ஐயும் தொகுத்து இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய blog-ல் பதிவு செய்ய உள்ளேன் --sarayutoayodhya.blogspot.in
An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.
நன்றியும் நமஸ்காரங்களும்.
ramachandranvenkataraman
படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 - ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.
PART I
12 01 2014 1
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு
இப்பொழுது லோகம் முழுவதிலும் பஞ்சம்.
ஆயினும் சாத்தியப்படும் வரையில் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுதான் பரம
லாபம். பொருள், உடல், மனம், வாக்கு இவைகளை கொடுக்க வேண்டும். இந்த ஒற்றுமை இருந்தால்,
எவ்வளவு பேதமிருந்தாலும் அந்தரங்க அன்பிருக்கும். பணம் வெளிப்பிராணன்; வெளியில் சஞ்சாரம்
செய்வது அது. அதையும் கொடுக்க வேண்டும். தினமும் அஞ்சு நிமிஷம் பகவான் நாமா ஸ்மரணம்
செய்யுங்கள். ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால் லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகிவிடும்.
ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது. பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்.
13 01 2014 2
கல்லைத் தூக்கி சமுதிரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனால் மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல்லை ஏற்றினாலும் மூழ்கறதில்லே. கவலைகள் கற்கள் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெப்பத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கபடாமல் கரை சேர்ந்துவிடலாம்.
கல்லைத் தூக்கி சமுதிரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனால் மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல்லை ஏற்றினாலும் மூழ்கறதில்லே. கவலைகள் கற்கள் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெப்பத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கபடாமல் கரை சேர்ந்துவிடலாம்.
14 01 2014 3
உள்ளத்தில் துக்கமோ பக்தியோ அதிகமானால்
கண்ணால் ஜலம் வழிகிறது. கோபம் வந்தால் உதடு துடிக்கிறது. மனத்திற்கும் கண்ணுக்கும்
உதடுக்கும் சம்பந்தம் இருப்பதால். உள்ளே ஏற்படுகின்ற உணர்ச்சிக்கு ஏற்ப வெளியே சில
காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி வைத்து பார்த்தால் வெளியே செய்கின்ற சில சம்ஸ்காரங்களினால்
உள்ளே சில மாறுதல்கள் உண்டாகின்றன. பக்தி வரவேண்டும், சாந்தம் வரவேண்டும், சக்தி வரவேண்டும்
என்றால் வெளியே சில சின்னங்களை போட்டு கொள்ளவேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.
இவை எல்லாம் வெளி வேஷங்கள் என்று நினைத்தால் வெறும் வேஷமாகப் போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக
ஜீவனைப் பரிசுத்தம் செய்து கொள்வதற்காக' என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம்
ஏற்படுகிறது. புறச்சின்னங்கள் ஆத்மாவிற்கு உபயோகப்படுகின்றன.
15.01.2014 4
ஒரு பெரிய குளம். அதனடியில் சேறு
நிறைந்த ஒரு சுரைக்குடுக்கை கிடக்கிறது. அக்குடுக்கை அடியில் கிடப்பதற்குக் காரணம்
அதில் நிறைந்திருக்கும் சேறுதான். அச்சேற்றை எடுக்க எடுக்க அக்குடுக்கை மேலே வரும்.
அப்படியே மனதிலிருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி அதை சுத்தப்படுத்தினால் அதுவும் மேலே
வரும். ஹ்ருதயமாகிற சிம்மாதனத்தில் பகவானை உட்கார்த்தி வைப்பதற்க்கு அச்சிம்மாஸனம்
சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கக்கூடாது. கெட்ட எண்ணங்களாகிற அசுத்தத்தால்
ஹ்ருதயம் ஆக்கிரமிக்கப்படாமலிருக்க வேண்டும்.
16.01.2014 5
சிலாதர் என்று ஒரு ரிஷி சின்ன
வயசில் பிட்சைப் பாத்திரத்தில் கல்லை போட்டுவிட்டார். குருடனான பிட்சாண்டியும் கல்லைச்
சேர்த்து சாப்பிட்டு விட்டான். அந்த சிறுகல் தான் யமலோகத்தில் பாறையாக வளர்ந்திருந்தது.
அவர் இறந்த பிறகு பொடித்து சாப்பிட வேண்டும் என்று அறிந்தார் சிலாதர். பூலோகத்திலேயே
அப்படி ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து குடித்து விட்டார்.
யமலோகப் பாறை காணாமல் போயிற்று. ஏகாதசி துவதாசி நாட்களில் விரதமிருந்து நாமும் பதினைந்து
நாட்களுக்கு ஒரு முறை பாவத்தை கரைத்து விட முடியும்.
காய்கறி வெட்டறோம். புழு சாகறது. நமக்காக சமையல் செய்யறவா
சுட்டுக்கொன்ன அந்த பாவத்தில் சாப்பிடுகிற எல்லோருக்கும் பங்குண்டு. அவசரமாக போகிறோம்.
கால் மிதி பட்டு எறும்புகள் சாகறது. முட்ட வருகிற பசுவை கோபத்தில் அடிக்க வேண்டி வரும்.
அடுப்பில் உள்ள பால் தீய்ந்தாலே பாபம், அது மாட்டின் உதிரம். பூப்பறிக்கும்போது மொட்டுகளையும்
காய்பறிக்கும்போது பிஞ்சுகளையும் பறிப்பது பாபம். இவை குவிந்து போகாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.
17.01.2014 6
மறுநாள் பட்டினியாச்சேனு முதல்
நாள் தசமி அன்னிக்கு திணியத் திணியச் சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று லேசான ஆகாரமா,
சுத்த ஆகாரமா பகல் ஒரு வேளை சாப்பிட்டு இராத்திரி பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கணும்.
அதேமாதிரி ஏகாதாசிக்கு மறுநாள் வயிற்றுக்கு நிறைய வேலை தரக்கூடாது. அகத்தி புண்பட்ட
வயிற்றை ஆற்றும். நெல்லிக்காய், சுண்டைக்காயெல்லாம் கட்டாயம் சேர்த்துக்கணும். துவாதசி
அன்று யாராவது ஒரு ஏழைக்கு அன்னம் போடுகிறது நல்லது. நம்மாலேயும் ஒருத்தர் பசியைத்
தீர்க்க முடிகிறதே என்கின்ற சந்தோஷம் உண்டாகும். ஏகாதசி அன்னிக்கு பரநிந்தை பண்ணக்கூடாது.
சாந்தமாயிருக்கணும். பகவான் நாமாவைச் சொல்ற நாக்கு கெட்ட வார்த்தை பேச அனுமதிக்காம
அடக்கி வைக்கணும். பெரிய ஏகாதசி அன்னிக்கு சந்தனம் பூசிக்க கூடாது. தாம்பூலம் போட்டுக்க
கூடாது என்பா. ஏன்? இதெல்லாம் மற்ற பக்தர்களோட மனசைக் கலைக்கலாம். விரத நாளிலே ஏன்
பாவம் பண்ணனும்!
18.01.2014 7
நெல்லு மூட்டையாக்கட்டி களஞ்சியத்துக்குப்
போறதேன்னு பூமி அழறதில்லே. மனுஷன் அழறான். ஜீவன் தன் கடமையை முடிச்சுண்டு பரலோகம் போறது!
எல்லோரும் ஒரு நாள் போகறவாதான். தங்கறவா யாரு? கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். நெல்லு
மட்டும் களஞ்சியத்துலேயே இருக்க முடியுமா? மூணு வருஷம் கழிஞ்சா விதைக்கு கூட ஆகாது.
கோவிலுக்கு, நல்ல மனிதர்களுக்கு, உணவாப் போற நெல்லு மாதிரி, புண்ணியம் பண்றவா....சாதாரண
மனுஷாளுக்கு உணவாகர நெல்லு பாபம்-புண்ணியம் ரெண்டையும் பண்றாப்போல. வயலிலே, அரைக்கிற
எடத்துலே கீழே சிந்தற நெல்லைப் போல- களையறச்சே சிந்தற அரிசி, சாவியாப்போற அரிசி, புழுக்கட்டிப்
போனது- இது மாதிரிதான் மனுஷாள்ளேயும் இருக்கா. சாவியா போன அரிசியா மனுஷா இருக்கப்படாது.
19.01.2014 8
இந்த காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள்.
'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்திற்காக நான் சாப்பிடுகிறேன்' என்று
சொல்லிக்கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன். அது இவனுக்குத்தானே புஷ்டி
தரும்? இன்னொருவனுடைய சுகத்துக்காக சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டால், அந்த இன்னொருவனுக்கு
எப்படி புஷ்டி கிடைக்கும்?' என்று கேட்கலாமா?
இதெல்லாம் ஒரு மனோபாவம். இந்த
மனோபாவமே இன்னொருவனுக்கு புஷ்டி கொடுக்கிறது. இப்படியே யாகங்களில் நாம் அக்னியில் போடுகின்ற
ஆஹூதிகள், அவிசுகள் யாவும் தேவதைகளுக்கு சக்தி கொடுக்கின்றன. இவ்வாறு பாவித்து நாம்
யக்ஞம் செய்தால் தேவர்களும் அப்படியே பாவித்து நமக்கு அநுக்கிரகம் செய்வார்கள்.
21 01 2014 8
ஒரு பட்டணத்துலே ஒரு பெரிய ஆஸ்பத்திரி.
அங்கே உடம்பெல்லாம் வெந்து கத்திண்டு இருக்கற ஒரு நோயாளியை கொண்டு வரா. இன்னொரு வண்டி
வரது. அதிலே மாடி படியிலேயிருந்து தவறி விழுந்து நினைவு தப்பிப் போன ஆள் வரார். அடுத்து
விபத்து நடந்து இரத்தம் சொட்ட ஒருத்தரை கொண்டுவரா. இதுல காய்ச்சல், தலைவலி போன்ற
சின்ன உபாதைகளோடு வரவா கிட்ட சின்ன டாக்டர் தான் நிப்பா. அதுக்காக வைத்திய சாலையிலே
அலட்சியம் பண்றான்னு அர்த்தம் பண்ணிக்கலாமா? உன்னைவிட அவசியமானவாளுக்கு பகவான் ஓடிக்கொண்டிருக்கார்.
அவசரமா கவனிக்க வேண்டியவா யாருன்னு பகவானுக்கு தெரியாதா?
25 01 2014 9
வெள்ளைச் சர்க்கரை; தண்ணீர் கலக்காத
பால்; அக்னி அதுக்குண்டான பாத்திரங்கள். இது இருந்தா எல்லோராலேயும் ருசியான பால்கோவா
கிண்டிட முடியுமா? எத்தனை பேர் கவனக்குறைவா அடிப்பற்ற விட்டுடறா? எத்தனை பேர் இனிப்பை குறைச்சலா போட்டுடறா?
திகட்டி அலுத்துப் போகிற மாதிரியும் சில பேர் பண்ணிடறா. பல பேர் அஜாக்கிரதையா பாலையே
கொட்டிடறா! சிலபேருக்குப் பாறைமாதிரி அமைஞ்சுடறது. பயந்துபோய் முன்னாலேயே இறக்கிக்
களகளன்னும் ஆகிவிடறது.
அக்னி தான் ஆத்மா. அது எல்லாரிடத்திலும் ஒரே மாதிரி தான். உபகரணங்கள் தான் தாய், தந்தை,
மனையாள், புத்திராள் என்கிற சூழ்நிலை. பால் போல மனசை ஆக்கிக்கணும். எல்லாருக்கும் இனிப்பானவனா,
உபகாரம் செய்யறவனா வாழறது தான் வாழ்க்கை. பாலையும், இனிப்பையும் படைச்ச பகவான் அதைக்
கறுப்பாக்கச் சொல்லி அவரா சொன்னார்? மனுஷாளோட அசிரத்தை தான் காரணம்.
ஒரு தடவை தப்பாயிடுதுங்கறத்துக்காக
மேலே மேலே தவறு செய்யப்படாது. தீய்ஞ்சு போயிடுத்துன்னா மேலா எடுத்துடணும். அப்போ எல்லாம்
வீணாகாது. பாலும் சர்க்கரையும் நல்லது தான். அதுக்காக அதிகமா சேர்த்துண்டா அவஸ்தையாயிடும்.
எதுவும் அளவோட இருக்கறது தான் பக்குவம்.
இன்று பிரதோஷம் (28 01
2014) 10
எங்கும் பிரதோஷ காலத்தில் சிவன் நடனம் செய்கிறார். விஷேஷமாக சிதம்பரத்தில் நடராஜரது நர்த்தனம் மிக ஆனந்தமானது. வ்யாக்ரபாதர் புலி, பதஞ்சலி பாம்பு. பயங்கரமான இவைகளுக்கும் நடனம் இன்பம் அளிக்கிறது. நந்திக்கு கொம்பும் கால்களுமுண்டு. வ்யாக்ரபாதருக்கு கால்களுண்டு. பதஞ்சலிக்கு இரண்டுமில்லை. கண்ணும் காதும் அவருக்கு ஒன்றே. கண்ணை மூடினால் காது கேளாது. நடராஜ தாண்டவத்தை அவர் நன்கு அனுபவிப்பவர். சதா தியானம் செய்பவர். அவர் நடராஜ நடனத்திற்கு ஏற்ப 8 ஸ்லோகம் இயற்றினார். அவரைப் போல் அவைகளுக்கும் -- தீ, தா -- என்ற கொம்பும் காலுமில்லை. ஸ்ரீ மடத்திலும் பிரதோஷ காலத்தில் அந்த பாராயணம் நடக்கிறது. மாலையில் சிவசேவை செய். ஆனந்தமுண்டாகும் (ஸதஞ்சித.........ஹ்ருதிபஜ)
............ continued to Part II
எங்கும் பிரதோஷ காலத்தில் சிவன் நடனம் செய்கிறார். விஷேஷமாக சிதம்பரத்தில் நடராஜரது நர்த்தனம் மிக ஆனந்தமானது. வ்யாக்ரபாதர் புலி, பதஞ்சலி பாம்பு. பயங்கரமான இவைகளுக்கும் நடனம் இன்பம் அளிக்கிறது. நந்திக்கு கொம்பும் கால்களுமுண்டு. வ்யாக்ரபாதருக்கு கால்களுண்டு. பதஞ்சலிக்கு இரண்டுமில்லை. கண்ணும் காதும் அவருக்கு ஒன்றே. கண்ணை மூடினால் காது கேளாது. நடராஜ தாண்டவத்தை அவர் நன்கு அனுபவிப்பவர். சதா தியானம் செய்பவர். அவர் நடராஜ நடனத்திற்கு ஏற்ப 8 ஸ்லோகம் இயற்றினார். அவரைப் போல் அவைகளுக்கும் -- தீ, தா -- என்ற கொம்பும் காலுமில்லை. ஸ்ரீ மடத்திலும் பிரதோஷ காலத்தில் அந்த பாராயணம் நடக்கிறது. மாலையில் சிவசேவை செய். ஆனந்தமுண்டாகும் (ஸதஞ்சித.........ஹ்ருதிபஜ)
............ continued to Part II
No comments:
Post a Comment