Popular Posts

Wednesday, October 31, 2012

Swamimalai Murugan part 1 ஒரு கால் நினைக்கின்


ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

 சரயுவின் கவிதைகள்      வே. ராமச்சந்திரன் 
 


குமரன் சிரிப்பின் அழகு குன்றத்தில் ஒளியாய் மிளிர 
வேல் ஏந்திய கையினன் அபய முத்திரை காட்டியென்
அடிபணிந்த மனதினில் அச்சத்தை தவிர்த்துட்டு
பாலும் பன்னீரும்  சந்தனமும் பஞ்ச அமிர்தமும் 

எங்கென வினவ அவை கொண்டு அபிஷேகமிட்டு
மல்லிகை பூ மாலையிட்டு தசாங்கமும் தாம்பூலமும் 
சமர்பித்து எனைக் காக்க மயிலேறி வந்தவனை
சிரம் தாழ்த்தி வணங்கி மனம் குளிர தரிசித்தேன்! 

 





மீசை நரைத்திடினும் ....


மீசை நரைத்திடினும் ....

சரயுவின் கவிதைகள்      வே. ராமச்சந்திரன் 

அலை நோக்கிச் செல்ல கால் போன போக்கில் 
சிறுவன் போல் கடற்கரையில் கால்கள் பதிக்க
நுரைத் தண்ணீர் கால் கழுவ கால் கீழ் மணல் 
அரிக்க மனம் லேசாகப் பறக்கையிலே அகில
உலகம் பெற்றது போல் மகிழ்திட்ட போழ்தினிலே 
என் ஆசை நரைக்கவில்லை!

தெருக்கோடி சிறுசுகள் பந்து வீசி மட்டைக் கொண்டு 
அடிக்கும் வேளையிலே லாவகமாய் பந்தெடுத்து சுழற் 
பந்தாய் வீசுகையில் கைத்தட்டும் சிறுசுகளின்
புன்னகையில் கரைந்திட்டு பந்து போன்ற உலகம் 
கைக்குள்ளே வந்திட்ட மனத்தினனாய் பூரித்திடும் 
என் ஆசை நரைக்கவில்லை!

மருந்தே உணவென்பார் வீட்டினிலே ஆயினும்
மாலை பூங்காவினில் நண்பர் குழாம் சேர்கையில்
மின்வெட்டு முதல் தேர்தல் வரை அலசி ஆராய்ந்தபின்
அவர்களின் சிலர் உந்துதலால் வேண்டுவன உட்கொண்டு
அதை விமரிசனமும் 
செய்திட்டு மகிழ்ந்திட்ட மனத்தினன்    
என் ஆசை நரைக்கவில்லை! 
  

Thursday, October 25, 2012

பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short


பிரம்மோபநிஷத் சுருக்கம் Brahmopanishad in short

பிரம்மோபநிஷத்
சுருக்கம்                                  



இந்த உபநிஷத் 23 செய்யுள்கள் கொண்டது. அதன் பொருள் சுருக்கம் இவ்வாறு. உடலில் நான்கு இடங்களில் பரமாத்மாவை நான்கு வடிவில் தியானிக்க வேண்டும். தொப்பிள் குழியில் விழிப்பு நிலையில் பிரம்மாவாகவும், ஹிருதயத்தில் கனவு நிலையில் விஷ்ணுவாகவும், கழுத்தில் உறக்க நிலையில் ருத்ரனாகவும், தலை உச்சியில் துரீயசமாதியில் அக்ஷரபிரம்மமாகவும் தியானிக்க வேண்டும். அந்த பரமபுருஷன் மனதில்லாமல் நினைப்பவனாகவும், காதில்லாமல் கேட்பவனாகவும், கை கால்கள் இல்லாமல் செயல் புரிபவனாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வருபனாகவும் உள்ளவன். நான்காம் நிலை நிர்வாண நிலையான பரபிரம்மமாகும். அதில் உலகம் உலகமாயில்லை, தேவர்கள் தேவர்களாக இல்லை.மனிதர்கள் மனிதர்களாக இல்லை. எல்லாம் ஒன்றேயான பரபிரம்மமாக விளங்குகின்றது. உலகக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஞானியானவன் இந்நிலையில் சர்வ வல்லமை உள்ளவனாக விளங்குகின்றான்.
பரமாத்மாவே தெய்வமாகவும், பிராணணாகவும் மற்றும் அறிவாகவும் எல்லோருடைய உள்ளத்திலும் விளங்குகிறது. இதைக் குறிப்பிடுவதற்கு தான் மூன்று இழைகளையுடைய பூணூல் அணியப்படுகிறது. வெளிப்படையான பூணூலை விட்டுவிட்டு பிரம்மபாவனையகிற பூணூலை துறவி அணிகிறான். ஞானியின் பூணூல் ஒரு போதும் அசுத்தமாகாது. ஞானமே சிகையாகவும் ஞானமே பூணூலாகவும் உடைய சிறப்புள்ளவர்கள் அவர்கள். ஞானத்தைபோல் புனித தன்மை அளிக்க கூடியது வேறு ஒன்றுமில்லை. அவனுக்கு பிராமணத்துவம் முழுவதும் (வேதம் முழுவதிற்கும் அதிகாரம்) சித்திக்கும் என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஞானசித்தியாவது ஈஸ்வரனை உள்ளத்தில் காண்பதாகும். அப்படி காண்பவர்களுக்கு அழியாத சுகம் உண்டு. மற்றவர்க்கு இல்லை.

சத்தியத்தையும் தவத்தையும் கைக்கொண்டு முயல்பவர்களுக்கு எள்ளில் மறைந்திருந்த எண்ணெய் போலவும், தயிரில் மறைந்திருந்த வெண்ணை போலவும், அரணிக்கட்டையில் மறைந்திருந்த நெருப்பு போலவும் சாதனையின் பயனாக மறைந்திருக்கும் ஆத்மா வெளித்தோன்றும். அந்த ஆத்மசாக்ஷாத்காரம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத ஆனந்த நிலை. அதை உணர்ந்து புத்திமான் முக்தனாகிறான். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடையப் படவேண்டிய பதவி.

ECO FRIENDLY GANESHA


ECO FRIENDLY GANESHA
DURING VINAYAGA CHATHURTHI
சரயுவின் கவிதைகள்    வே. ராமச்சந்திரன்  


அச்சில் வார்த்த பச்சை மண் மேனி 
அதற்கான எருக்க மாலை
அருகம்புல் பரப்பிய கோலமிட்ட பலகை
அமர்ந்து நீர் எமக்கு அருள்வீர் இன்றே !

யாமும் இங்கு வெற்றிலை வாழை தேங்காயுடன் 
இதமாய் கரும்பும் சேர்த்து பசும் பால் தயிர் நெய் 
சிறுநீர் சாணம் என கோமியம் செய்து உனக்கே 
பிடித்த மோதகம் லட்டூகம் வைத்து வஸ்திரம் அளித்து 
நினை வேண்டுகின்றோம் சரயுவின் குடும்பத்தினரே 
எமக்கு அருள்வாய் கணேசா!




This year' Ganesh Chathuthi was celebrated in the morning at 9 AM and as usual with the ecofriendly Ganesha.  Though It was raining yesterday afternoon in Bangalore we managed to get all that was required for the Pooja. Some photographs taken during the pooja.









Vinayaka Chathurthi 17th September 2015










Updation with the Ganesha at Home on this year's  Vinayaka Chathurthi 2017





நாங்கள் மாறவில்லை .




நாங்கள் மாறவில்லை .
சரயுவின் கவிதைகள்   

வே. ராமச்சந்திரன் 













காலை வேளையிலே கழனி சென்று
களை எடுத்து நீர் பாய்ச்சி மருந்தடித்து
உற்றானுக்கு மதிய அமுதமும் படைத்து
விளை முத்துக்களை அறுவடை செய்து
நன்னாளில் பொங்கலும் படைத்து
நம் பாரம்பரியத்தை காக்கும் நாங்கள் மாறவில்லை!
ஆயின் கல்வி கோவில்களில் ஞான அமுது பெற
அனுப்பி வைத்த வாரிசுகளோ மாறினரே இவ்வாறு
!

விவாக விவேகம் சரயுவின் கவிதைகள்


விவாக விவேகம்         சரயுவின் கவிதைகள்    வே . ராமச்சந்திரன் 

இருவர் சேர இரு குடும்பங்கள் இரவு பகலாய்
சிந்தித்து, முடிந்தவரை அலசி ஆராய்ந்து 
உறவினர் நண்பர் என பலரிடம் கலந்து பேசி
நல்ல நேரமும் கணித்து செய்த விவாகமானாலும் 
இதில் குற்றம் அதில் குற்றம் என தவறே கண்டு 
சர்ச்சை செய்து நொடிபொழுதில் முடிவு செய்து 
பிரிவதை அன்றாட காட்சியாய் நாம் பார்க்கின்றோம்!

நாங்கள் அப்படியல்ல என்று மார்த்தட்டி, பல வருட
பழக்கத்தின் நட்பு மூலம் தெரிந்துகொண்டோம் 
புரிந்து கொண்டோம் ஒருவரைஒருவர் என்று கூறி 
விவாகமும் புரிந்து கொள்வார்அடுத்து சந்திக்க 
நேர்கையிலே இருவரும் ஒருவராய்
வாழாதது காண்கிறோம்! இவர்களும் பிரிந்தே வாழ்கின்றனர்!

இருவருக்கும் பிடித்தவை எவை என பல 
மணி நேரம் விவாதித்து எடை போடாதீர்!
மக்களே எவைகள் பொருந்தாது பிடிக்காது
(Incomptibilities )
என வரிசையிட்டு அவையில்
பலவற்றை ஏற்று சகித்துக்கொள்ளும் மனப்பாங்கு 
உண்டா என முதலில் காண்பீர்! சம்மதமும் 
பெறுவீர் விவாகத்திற்கு இருவரிடமும்எத்தகைய 
விவாகமும் வெற்றி பெரும் வாய்ப்பதிகம் !!  

Sunday, October 21, 2012

முதுமை சரயுவின் கவிதைகள்



முதுமை 



சரயுவின் கவிதைகள்  வே. ராமச்சந்திரன் 



 

தாய் தந்தையரால் எழுதப்பட்டு 
காலம் திருத்தங்கள் மேற்கொண்டு 
மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை 
என பறை சாற்றினாலும் இனி
ஒன்றும் இல்லை என அறிவிக்கும்
கடைசி அத்தியாயத்தின் சில வரிகள்.

விடியலில் எழுந்து பூங்கா நடையில்
வீரியம் கொண்டு நண்பர் குழாமுடன்
பொழுது கழிப்பினும் நேரம் கடத்த
முகப்புத்தகம் தன்னில் அஞ்சல் செய்து
நண்பர்கள் கூடே அளவளாவி 'விருப்பம்'
பெற்றும் கொடுத்தும் நாளும் போச்சே!.

விடிகாலை பத்திரிகை காப்பியும் போச்சு
தொலைக்காட்சி மயமாய் உட்கார்ந்தும் ஆச்சு
பக்தி திருவிழா முதல் பாட்டுக்கூத்து வம்பு வரை
சவால் விடும் வில்லிகள் கூவப் பேச்சினும் கேட்டு
பலத்த கைத்தட்டல் உரத்த பேச்சு கையால் பேசும்
நிகழ்வுகள் எல்லாம் மிகப் பழகியும் போச்சே!  




சுருங்க நொறுங்க சாறாக உண்ணின் திடமாக
நூறு வயது காண்பீர் எனும் காலம் போய்
மருந்து மாத்திரையே உணவெனும் காலமும்
வந்தாச்சே! வாரிசுகள் நிழலினில் வளைய வந்து
விருப்பு வெறுப்புகள் தூர விலக்கி அமைதியுடன்
இறைப்பொருள் காணும் நேரமும் வந்தாச்சே!


Wednesday, October 17, 2012

காலம் மன்னிப்பதில்லை - சரயுவின் கவிதைகள்

காலம் மன்னிப்பதில்லை 

சரயுவின் கவிதைகள்    வே. ராமச்சந்திரன் 

நேற்றைய நினைவில் மூழ்கி 
இன்றைய நிகழ்வை மறந்து 
நாளைய கனவை தொலைத்து 
மற்றோர் குறை கண்டு எக்காலமும் 
ஜடமாய் அமர்ந்திருந்தவன் எவனோ 
அவனை காலம் மன்னிப்பதில்லை!

கொலை, களவு, பொய் செய்து கள்ளுண்டு

காம வசப்பட்டு அடக்கமின்றி திரிந்து 
பொறுமை நேர்மை வாய்மை கைவிட்டு 
அருளின்றி உறுதியின்றி தூய்மை விட்டு 
சமயத்தே உண்டி சுருக்காதான் எவனோ 
அவனை காலம் மன்னிப்பதில்லை!! 

உடல், உயிர், செல்வம் இவை நிலையென 

எண்ணி வான் சிறப்பு நோக்கான் 
அன்பு விடுத்து தானம் செய்தல் விட்டு 
தன் வாழ்வே பிரதானம் என நடுநிலை அற்றான் 
அந்தணன் ஆயின் வேள்வித்தீ அற்றோன்- எவனோ 
அவனை காலம் மன்னிப்பதில்லை !!!

Tuesday, October 16, 2012

Bhagavan Ramakrishna's short stories - Two yogis


Bhagavan Ramakrishna's short stories - Two yogis

BHAGAVAN RAMAKRISHNA'S SHORT STORIES

TWO YOGIS


Two yogis were doing their tapas in order to see the God.   One day, Sage 
Nararadha went past them.   One of the yogis asked Naradha whether he 
was coming from Vaikunta?   The sage replied as "yes".   Then the two yogis 
asked Naradha what the bhagavan was doing at that time?   Naradha said 
"Bhagavan was playing and enjoying making elephants and camels to go 
through the eye of the needle forward and backward".   For that, one of the 
yogis said it was no wonder and Bhagavan would definitely do to such things.   
There was nothing in the world that the bhagavan could not do.    However, 
the other yogi said that it was foolish to say such things.  He also said that 
showed the sage had not gone to Vaikunta ever and definitely not coming 
from there.

The first yogi's faith and devotion on the bhagavan is like that of the child 

to feel that there cannot be anything in this world, which the bhagavan 
cannot do.   We should understand that Bhagavan's many gunas cannot 
be understood also.  Whatver is said about the bhagavan will fit in aptly.

Significance of Navaratri


Navaratri

Updated on 29 09 2016

Navratri, the nine-night festival, honors Goddess Durga, Goddess Lakshmi and Goddess Saraswathi in South India. It is known as Bommla Koluvu in Andhra Pradesh and Navarathri in Tamil Nadu and Kerala. Navratri is observed as Dusshera in Karnataka, where it is observed for ten days. The main event during Navrathri in South India is the display of dolls and idols – Kolu and the placing of Kalash, which represents Goddess.    Mother Durga symbolizes the power of purposeful action (Kriya Sakti). Lakshmi represents the will power (Itchaa Sakti) and Saraswati stands for the power of knowledge (Jnana Sakti).

The date for keeping the Kalasa is important as we are inviting Maa sakthi and bringing in the Kalasa.   Once when the steps are made in odd numbers,  the Kalasa is kept in the middle step.  The year 2016, it is to be started in the evening on 30.09.2016 with timing being 5 to 6 PM. 






The First Three Days of Navratri
The first three days of Navratri are devoted to the worship of the Goddess Durga. This is the period, when her energy and power are worshipped. Each day is dedicated to a different appearance of Durga. Kumari, which signifies the girl child, is worshipped on the first day of the festival. Parvati, who is the embodiment of a young woman, is worshipped on the second day. The destructive aspects of Goddess Durga symbolize the commitment to acquire triumph over all the evil tendencies. Hence, on the third day of Navratri, Goddess Kali is worshipped, who represents the woman who has reached the stage of maturity.

Fourth to Sixth Days of Navratri
When a person acquires triumph over evil tendencies of ego, anger, lust and other animal instincts, he/she experiences a void. This void is filled with spiritual wealth. For the purpose, the person approaches Goddess Lakshmi, to acquire all the materialistic, spiritual wealth and prosperity. This is the reason why the fourth, fifth and sixth day of Navratri are dedicated to the worship of Lakshmi - the goddess of prosperity and peace.

Although the individual has acquired victory over evil tendencies and wealth, he is still deprived of true knowledge. Knowledge is required to live the life of a humane, even though he/she is prospered with power and wealth. Therefore, Goddess Saraswati is worshipped on the fifth day of Navratri. All the books and other literature materials are gathered in one place and a 'diya' (earthen lamp) is lit in front of the deity, to invoke the goddess and seek her blessings. Till the time the books are kept at the puja room, the students would not study.

Seventh and Eighth Day of Navratri
The seventh day is dedicated to worshipping Saraswati, the goddess of art and knowledge. Prayers are offered with an aim to seek spiritual knowledge. A 'yagna' is performed on the eight day. This comprises of a sacrifice honoring goddess Durga as well as bids her farewell. The sacrifice or offering is made out of clarified butter (ghee), rice pudding known as kheer and sesame seeds.

Ninth Day of Navratri
The ninth day is the final day of Navratri celebrations. It is also known as 'Mahanavami'. On the day, Kanya puja is performed to worship nine young girls, who have not yet reached the stage of puberty. These nine girls symbolize one of the nine forms of goddess Durga. The feet of girls are washed to welcome the goddess and show respect to her. The girls are offered a set of new clothes as a gift from the devotees at the end of the puja.

House golu of 2014


The Navarathiri celebration brings with it, the gathering of people nearby and women inviting people around.  The customary request for singing the invitee is followed by offering of "Sundal" and also Thamboolam.    The Sundal also varies for the nine days.




Some houses arrange bhajans too during this period.  





The celebrations come to a close on Dasami Day, with Vijaya Dasami, Saraswathi Pooja and  those who are involved in business and also for vehicles at home and tools in manufacture and repairs celebrate it as Ayutha Pooja.  On all these days, the temple deities are prayed with different alangarams each day. The picture above shows the alangaram of Saraswathi made in a temple.

Updated on 04 10 2018
There had been guidelines being followed over generations in each family for the festivities of Navarathri in inviting people and having joint prayers in front of the Golu with songs and Bhajans. Temples also do special alankarams on each day to the deities during Navarathri.   Mahaperiyava also had spoken on this and the one in Tamil is posted below:

நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்களையும் சக்தி அம்சம்அவாளை சுவாசினியா உருவகப்படுத்தி பூஜை செய்யலாம்சிவ-சக்தி வடிவமா தம்பதி பூஜை செய்யறதுக்கு விசேஷம். ஒரே நாளில் ஒன்பது பேருக்கோ, ஒவ்வொரு நாளில் ஒவ்வொருத்தருக்கோ, எண்ணெய் தேய்த்து நீராடக் சொல்லணும்நிறைய மஞ்சள், மருதாணி, புது வஸ்திரம் எல்லாம் கொடுக்கணும்சாட்சாத் லலிதையாவே வரிச்சு, குழந்தை உட்கார்ந்திருக்குமானால், ஸஹஸ்ரநாமமே பண்ணலாம். இல்லேனா திரிசதி, அஷ்டோத்திரம், திருப்தியா போஜனம்- பக்கத்திலே இருந்து அன்பா பரிமாறணும்யதா சௌகரியம் போல் இதைச் செய்துண்டு வந்தால் அம்பாள் அனுகிரஹத்தில் சக்தி பெருகும்.

கிரகத்துக்கு வர சுமங்கலிகளிலே வேணும்கறவா, உறவுக்காரா என்றெல்லாம் பார்க்காம சர்வ தாம்பூலம் கொடுக்கற சிந்தனை வரணும்அப்போதுதான் கிருஹத்திலே சுபிட்சம் பொங்கும். நவராத்திரிலே சுமங்கலிகள் எல்லாருமே ஸூவாஸினிகள்தான்.

"குரவ காக்யஸ்யதரோ புஷ்போத்பத்யர்த்தம்  
ஸ்த்ரீ-ஸ்தான-லிங்கன-ரூப-தோஹத-குதூகலஸ்யா
சேதனஸ்ய வ்ருஷ-விசேஷஸ்யாபி  அஸூலபா".

மரத்துக்கு உயிரிலேன்னு பலபேர் நினைப்பாஸ்த்ரீகள் தொட்டு பறிச்சா சில செடி, கொடிகள் அதிகமாப் பூக்குமாம்காய்க்குமாம். அதிலே ஒண்ணு மருதாணி. அதுக்கு சம்ஸ்க்ருதத்தில் குரவகம்னு பேரு. அசோக மரத்துக்கு கங்கேலி, காமகேலின்னு பேருஅதோட பூ சிவப்பா இருக்கும். பூக்காம இருந்தா உத்தம ஸ்திரீகளை அதைத் தொடச் சொல்வா. மரம் கொள்ளாம பூத்துடும்.

'பாதாஹத: ப்ரம தயாவிக ஸத்ய சோக' ங்கறது பெரியவா வாக்கு.

தேவி நந்தவனத்தில் உலாவரும், அவளோட பாத துளி படாதான்னு அசோகமரம் ஏங்கறதா ஆதிசங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரி -லே சொல்லி இருக்கா.


சர்வாலங்கார பூஷிதையா, புன்சிரிப்போட, நல்ல குணங்கள் நெறைஞ்ச பல சுமங்கலிகள் பாதம் பட்டாலே கிரஹ தோஷங்கள் விலகறதுசம்பத்து கூடறதுஅதனாலேதான் கொலுன்னு ஏற்படுத்தினாபல ஸ்திரீகளை, கன்னிகைகளை அழைத்து தாம்பூலம் கொடுத்தா, வாங்கிண்டா நல்லதுவருஷம் பூராவும் ஸ்திரீகளை ஆராதிக்க முடியலேன்னாலும் இந்த ஒன்பது நாளாவது கடைபிடிக்கணும்னு வைச்சா. கிரஹஸ்தா இதைக் கைவிடப்படாது.