முதுமை
சரயுவின் கவிதைகள் வே. ராமச்சந்திரன்
தாய் தந்தையரால் எழுதப்பட்டு
காலம் திருத்தங்கள் மேற்கொண்டு
மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை
என பறை சாற்றினாலும் இனி
ஒன்றும் இல்லை என அறிவிக்கும்
கடைசி அத்தியாயத்தின் சில வரிகள்.
விடியலில் எழுந்து பூங்கா நடையில்
வீரியம் கொண்டு நண்பர் குழாமுடன்
பொழுது கழிப்பினும் நேரம் கடத்த
முகப்புத்தகம் தன்னில் அஞ்சல்
செய்து
நண்பர்கள் கூடே அளவளாவி 'விருப்பம்'
பெற்றும் கொடுத்தும் நாளும் போச்சே!.
விடிகாலை பத்திரிகை காப்பியும் போச்சு
தொலைக்காட்சி மயமாய் உட்கார்ந்தும்
ஆச்சு
பக்தி திருவிழா முதல் பாட்டுக்கூத்து
வம்பு வரை
சவால் விடும் வில்லிகள் கூவப்
பேச்சினும் கேட்டு
பலத்த கைத்தட்டல் உரத்த பேச்சு
கையால் பேசும்
சுருங்க நொறுங்க சாறாக உண்ணின் திடமாக
நூறு வயது காண்பீர் எனும் காலம்
போய்
மருந்து மாத்திரையே உணவெனும் காலமும்
வந்தாச்சே! வாரிசுகள் நிழலினில்
வளைய வந்து
விருப்பு வெறுப்புகள் தூர விலக்கி
அமைதியுடன்
இறைப்பொருள் காணும் நேரமும் வந்தாச்சே!
No comments:
Post a Comment