மீசை நரைத்திடினும் ....
சரயுவின் கவிதைகள் வே. ராமச்சந்திரன்
அலை நோக்கிச் செல்ல கால் போன போக்கில்
சிறுவன் போல் கடற்கரையில் கால்கள் பதிக்க
நுரைத் தண்ணீர் கால் கழுவ கால் கீழ் மணல்
அரிக்க மனம் லேசாகப் பறக்கையிலே அகில
உலகம் பெற்றது போல் மகிழ்திட்ட போழ்தினிலே
நுரைத் தண்ணீர் கால் கழுவ கால் கீழ் மணல்
அரிக்க மனம் லேசாகப் பறக்கையிலே அகில
உலகம் பெற்றது போல் மகிழ்திட்ட போழ்தினிலே
என் ஆசை நரைக்கவில்லை!
தெருக்கோடி சிறுசுகள் பந்து வீசி மட்டைக் கொண்டு
தெருக்கோடி சிறுசுகள் பந்து வீசி மட்டைக் கொண்டு
அடிக்கும் வேளையிலே லாவகமாய் பந்தெடுத்து சுழற்
பந்தாய் வீசுகையில் கைத்தட்டும் சிறுசுகளின்
புன்னகையில் கரைந்திட்டு பந்து போன்ற உலகம்
கைக்குள்ளே வந்திட்ட மனத்தினனாய் பூரித்திடும்
என் ஆசை நரைக்கவில்லை!
மருந்தே உணவென்பார் வீட்டினிலே ஆயினும்
மாலை பூங்காவினில் நண்பர் குழாம் சேர்கையில்
மின்வெட்டு முதல் தேர்தல் வரை அலசி ஆராய்ந்தபின்
அவர்களின் சிலர் உந்துதலால் வேண்டுவன உட்கொண்டு
அதை விமரிசனமும் செய்திட்டு மகிழ்ந்திட்ட மனத்தினன்
என் ஆசை நரைக்கவில்லை!
No comments:
Post a Comment