காலம் மன்னிப்பதில்லை
சரயுவின் கவிதைகள் வே. ராமச்சந்திரன்
நேற்றைய நினைவில் மூழ்கி
இன்றைய நிகழ்வை மறந்து
நாளைய கனவை தொலைத்து
மற்றோர் குறை கண்டு எக்காலமும்
ஜடமாய் அமர்ந்திருந்தவன் எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை!
கொலை, களவு, பொய் செய்து கள்ளுண்டு
காம வசப்பட்டு அடக்கமின்றி திரிந்து
பொறுமை நேர்மை வாய்மை கைவிட்டு
அருளின்றி உறுதியின்றி தூய்மை விட்டு
சமயத்தே உண்டி சுருக்காதான் எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை!!
உடல், உயிர், செல்வம் இவை நிலையென
எண்ணி வான் சிறப்பு நோக்கான்
அன்பு விடுத்து தானம் செய்தல் விட்டு
தன் வாழ்வே பிரதானம் என நடுநிலை அற்றான்
அந்தணன் ஆயின் வேள்வித்தீ அற்றோன்- எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை !!!
இன்றைய நிகழ்வை மறந்து
நாளைய கனவை தொலைத்து
மற்றோர் குறை கண்டு எக்காலமும்
ஜடமாய் அமர்ந்திருந்தவன் எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை!
கொலை, களவு, பொய் செய்து கள்ளுண்டு
காம வசப்பட்டு அடக்கமின்றி திரிந்து
பொறுமை நேர்மை வாய்மை கைவிட்டு
அருளின்றி உறுதியின்றி தூய்மை விட்டு
சமயத்தே உண்டி சுருக்காதான் எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை!!
உடல், உயிர், செல்வம் இவை நிலையென
எண்ணி வான் சிறப்பு நோக்கான்
அன்பு விடுத்து தானம் செய்தல் விட்டு
தன் வாழ்வே பிரதானம் என நடுநிலை அற்றான்
அந்தணன் ஆயின் வேள்வித்தீ அற்றோன்- எவனோ
அவனை காலம் மன்னிப்பதில்லை !!!
Please enter comments as interaction helps
ReplyDelete